காதல் சிரிப்பு

நானோ கருப்பு
அந்த மான் மீது
எனக்கோ விருப்பு
அந்த தேனுக்கோ
என்மீது வெறுப்பு
அவள் மீன் விழியில்
நெருப்பு
தேன் மொழியில்
மறுப்பு
முகத்தில் காட்டுகின்றாள் முறைப்பு
பொன் கரத்தில் காட்டுகின்றாள்
செருப்பு
காதலிக்க
எனக்கேதும் கிட்டவில்லை துருப்பு
துடிக்கிறேன் அவளை செய்ய வழி மறிப்பு
தாங்கமுடியவில்லை என் தவிப்பு
தூங்கமுடியவில்லை என் தலைப்பு
என் அகத்திலோ முயற்சிக்கதவு திறப்பு
என் முகத்திலோ கூடியது பொறுப்பு
ஏற்றிக்கொண்டேன் தெம்பு
எதிர்க்கத் துணிந்தேன் வம்பு
கண்களில் கொண்டேன் அன்பு
கைகளில் கொண்டேன் செம் பூ
நட்பு எனும் அம்பை
கண்கள் எனும் வில்லில் நாணேற்றினேன்
அவள் மனதில்
காதல் எனும் அன்பை நானே ஏற்றினேன்
இப்போது அவள் முகத்தில் சிரிப்பு
இதுதான் காதல் முயற்சியின் சிறப்பு