வனப்பு வருணனை

வடிக்காத வெண்பாவே !
வாடாத பெண்பூவே !
வாடைக் காற்றில்
மடிக்காத முகிலே!
மரிக்கொழுந்து அகிலே!
மீன்கள் குடியிருக்கும்
தடிக்காத இதழ்விழியே !
தங்கப்பூ மேனியே !
தளிரே! மொட்டே !
கடிக்காமல் கன்னத்தில்
கறுமீசை வைத்து
கண்புருவத் தோடிணைப்பேன்

தீட்டாத ஓவியமே!
தேயாத வெண்ணிலவே!
தேகம் தன்னில்
ஒட்டாத தாமரையே !
ஒழுகாத பழச்சாரே!
ஒளிரும் பூமுகத்தில்
காட்டாதே கதிரவனை
குண்டுமல்லி குருதவல்லியே !
கையை எட்டினாலும்
சிட்டாத சிறுகுயிலே !
சிட்டுக்குருவி விழியழகே!
சீலையுடுத்திய சிலையழகே !

தேனொழுகும் சுவையுதடு
தித்திப்பு நல்கும்
தளிர்கொடி கன்னம்
வெண்ணையில் வடித்த
வெண்ணிலா சிற்பம்
வானவில் வண்ணத்தில்
புனைந்த ஓவியம்
பூக்கள் பூக்கும்
பாவை எழில்மேனி
நனைந்த புல்வெளிபோல்
நீராடி தலையுலர்த்தும் '
நீர்வார்ப் புனலே !

எழுதியவர் : பாஸ்கரன் து (1-Aug-16, 10:57 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
பார்வை : 284

மேலே