சின்னத்திரை
நாயகன் தட்டுக்கு
நாயகி தோசை சுட்டாள்
நாடக காட்சியொன்றில்
நாழிகை ஆகிறதே
நானிருந்தால் சுட்டிருப்பேன்
நாலைந்து தோசைகளை
நாசமாய்ப் போனவளே திட்டிதீர்த்தாள்
நாடகம் பார்க்கின்ற நங்கையவள்
நாடகம் முடிந்தபின்பு
நமக்கு இரண்டாவது தோசையுண்டு
நம்பிக்கையில் காத்திருந்தான்
நவயுகத்தின் கணவன் அவன்