சிறுநீரக செயலிழப்பை குணமாக்கும் ஹோமியோபதி மருத்துவம்
சிறுநீரக செயலிழப்பை குணமாக்கும் ஹோமியோபதி மருத்துவம்
டாக்டர் சி.அருள்மாணிக்கம் BHMS.,DFN.,DGC
வேலுமதி ஹோமியோ கிளினிக் திருவாரூர்
அலைபேசி: 98431 34564
65 வயது மதிக்கத்தக்க நோயாளியை எனது வேலுமதி ஹோமியோ கிளினிக்கிற்கு ஆம்புலன்ஸில் தூக்கி வந்தனர்.
நோயாளியின் மகன் என்னிடம்
“சார் தஞ்சாவூரில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் காட்டியும் இனி குணப்படுத்த முடியாது,தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டும், இரண்டு சிறுநீரகங்களும் தன் செயல்பாட்டை இழந்துவிட்டன இல்லையெனில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் இவரை காப்பாற்றலாம் அதுவும் உறுதியாக சொல்லமுடியாது நிறைய செலவு ஆகும் என மருத்துவர்கள் கூறினார்கள். எங்களால் அவ்வளவு பணம் செலவு செய்ய முடியாததினால் நீங்க வீட்டுக்கு தூக்கிகிட்டு போயிடுங்க என அனுப்பிட்டாங்க, நண்பர் தான் ஹோமியோபதியில் இந்த வகையான பெரிய பெரிய நோய்களையும் குணப்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுத்து உங்களிடம் அழைத்து வந்தார். அய்யா! இந்த ரிப்போர்ட் எல்லாம் பாருங்க"
என ஆய்வக பரிசோதனைச்சீட்டுகளை காட்டினார்.
அவற்றில் 24-12-13 அன்று எடுத்த பரிசோதனையில் இரத்தத்தில்
யூரியா(BLOOD UREA) =234 MGS/DL NORMAL VALUE 15-40 MGS/DL
கிரியேட்டினின்(SERUM CREATININE)=4.79 MGS/DL NORMAL VALUE 0.6-1.0 MGS/DL
சிறுநீர் பரிசோதனை அறிக்கை
யூரின் ஆல்புமின்= 1+
என இருந்தது.
சரி முதலில் சிறுநீரகம் என்றால் என்ன அது ஏன் செயலிழக்கிறது என்பதை பார்ப்போம்.
சிறுநீரகங்கள் என்றால் என்ன? அவைகளின் வேலை என்ன?
உங்கள் இரண்டு சிறுநீரகங்களும் முக்கியமாக 24 மணி நேரமும் உங்கள் இரத்தத்திலிருந்து கழிவுப்புக்களை (கழிவு பொருட்கள் - Waste Products) சுத்தப்படுத்தும் வேலையை பிரதானமாக செய்கின்றன. அவை விலா எலும்புகளுக்கு சற்றே கீழே பின்பக்கம் முதுகின் நடுப்புறத்தில் உள்ளன. பெரியவர்களுக்கு ஒவ்வொருவரின் கை முஷ்டி அளவு ஒவ்வொரு சிறுநீரகமும் இருக்கும். சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும் சிறுநீர் சொட்டு சொட்டாக உள் சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. தினந்தோறும் 24 மணி நேரத்தில் உங்கள் இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் இரத்தம் சென்று அதுனுள் உள்ள 140 மைல் நீளமுள்ள நுண்ணிய குழாய்கள்/ஜல்லடை உறுப்புகள் வழியாக கடந்து அதனுள் உள்ள கழிவுப்புக்கள் நீக்கப்பட்டு மீண்டும் உடலிற்குள் திரும்புகின்றது.
நம்மில் சிலருக்கே பிறப்பிலேயே ஒரு சிறுநீரகமே இருப்பதுண்டு. அதனோடு எந்த சுகக்கேடும் இல்லாமல் அவர்கள் 100 வயது வரை வாழவும் முடிகின்றது. நமது சிறுநீரகங்களின் செயல் திறன் 20% க்கு கீழ் குறையும் வரை நாம் எந்த ஆரோக்கயக் கேடும் உடல் கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும்.
1. சிறுநீரகங்களின் தலையாய பணி ஏற்கனவே சொல்லியிருந்தது போல நம் உடல் செயல்படும் போது உணவை எரிபொருளாக உபயோகப்படுத்தியபின் உண்டாகும் கழிவுப்புகளை தொடர்ந்து நீக்கி சிறுநீரில் சேர்த்து வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் ஒரு சுத்தீகரிப்பு தொழிலாளியின் வேலைதான்.
2. நம் உடலில் உள்ள திசுக்கள் இரத்தம், ஜீரண நீர்கள் உட்பட 60 சதவிகிதம் நீரால்தான் ஆனவை.
இந்த விகித்தை அதே 60 சதவிகிதமாக சரியாக வைத்திருப்பது சிறுநீரகங்கள்தான். நம் உடலில் உள்ள நீரின் அளவு. உணவிலும் திரவங்களாகவும் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு உடலிருந்து வெளியே செல்லும் தண்ணீரின் அளவு, (சிறுநீர், வேர்வை, சில சமயம் வாந்தி) இவைகளை கணக்கிட்டு அது சிறுநீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து எப்போதும் உடலில் நீரின் அளவு ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றது. இதனால் சிறுநீரக பாதிப்பில் உபரி நீர் உடலில் சேர்கின்றது. கை, கால், முகம், வயிறு ஆகியவற்றில் வீக்கம் உண்டாகின்றது.
3. நம் உடலில் பல்வேறு திசுக்களில் உள்ள தாது உப்புக்கள், இரசாயனங்கள் (உதாரணம் - சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், யூரிக் ஆசிட், பை-கார்பனேட் இன்னும் பல) ஆகியவற்றை சரியான அளவாக வைத்திருப்பது சிறுநீரகங்கள்தான். சிறுநீரகங்களை நம் உடலின் சூப்பர் இரசாயன கட்டுப்பாடு கேந்திரம் எனலாம் இதனால் சிறுநீரக செயலிழப்பில் பல்வேறு இரசாயனங்களின் அளவு மாறுபட்டு அதனால் பல தொந்திரவுகள் வரலாம்.
4. ஹார்மோன்கள் எனப்படும் சில சத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு வகை நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்பட்டு இரத்தம் வழியே வேறு உறுப்புகளுக்கு எடுத்து செயல்பட்டு அந்த உறுப்புகளின் பணியைக் கட்டுப்படுத்துகின்றன (உதாரணம் - தைராயிட் - தைராக்சின், கணையத் திட்டுக்கள் - இன்சுலின்). சிறுநீரகங்களின் சில பகுதிகள் நாளமில்லாச் சுரப்பியாக – செயல்பட்டு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
எரித்ரோபாயிட்டின் என்ற ஹார்மோன் எலும்பு மஜ்ஜையில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் திசுக்களின் மேல் செயல்பட்டு அதிக சிவப்பணுக்களை உண்டாக்கச் செய்கின்றது. கால்சிட்ரியால் என்ற ஹார்மோன் இரத்தத்தில் கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்தினை சீராக வைத்திருந்து அதன் மூலம் அது எலும்புகளில் படிவதை உறுதி செய்து எலும்புகளை வலுவாக வைக்கின்றது. ரெனின் என்ற ஹார்மோன் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. எனவே சிறுநீரக செயலழிப்பில் எரித்ரோபாயிட்டின் குறைவால் சிவப்பணுக்களின் குறைவு - இரத்த சோகை, கால்சிட்ரியால் குறைவு, அதனால் எலும்புகள் வலுவிழப்பு, ரெனின் அதிகரிப்பு அதனால் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நேருகின்றன.
சீறுநீரகங்கள் ஏன் செயலிழக்கின்றன?
சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது நம் உடலில் பல்வேறு கழிவுப்புக்களும், உபரி நீரும் படிப்படியே அதிகமாகின்றன. தாது உப்புக்கள் மற்றும் பல்வேறு இரசாயனங்களின் அளவுகளும் இரத்ததத்தில் இயல்புக்கு மாறுபடுகின்றன. சிறுநீரகங்களிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிப்பால் இரத்த சோகை, எலும்புகள் வலுவிழத்தல், உயர் இரத்த அழுத்தம் ஆகியன நேருகின்றன. இவை அனைத்தும் ஓரளவிற்கு மேல் அதிகமாகும் போது பல்வேறு சுகவீனங்கள் உடலிற்கு உண்டாகின்றன. சிறுநீரக செயலிழப்பிலும் இரண்டு வகை உண்டு.
1. திடீர் சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Failure : AKF)
நன்கு வேலை செய்து கொண்டிருந்த சிறுநீரகங்கள் திடீரென மிக விரைவாக சில நாட்களுக்குள் முற்றிலும் செயலிழந்து விடக் கூடும். விபத்தில் இரத்த இழப்பு, அதீத இரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில் கிருமித் தாக்குதல், சில வகை மருந்துகளுக்கு எதிர் விளைவு, வயிற்றுப் போக்கு சில வகை விஷங்களால் பாதிப்பு (உதாணரம் : பாம்புக் கடி, சாணிப் பௌடர், நாட்டு மருந்துகள்), சிறுநீரகக் குழாய்களில் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவை நம் நாட்டில் சில காரணங்கள் இச்சமயம் சிறுநீரகங்கள் முற்றிலும் செயல்படாவிட்டால் தற்காலிகமாக அலோபதி மருத்துவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை செய்வார்கள். பெரும்பாலான சமயங்களில் 2 - 4 வாரங்களில் சிறுநீரகங்கள் சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. முற்றிலும் பழைய ஆரோக்யம் திரும்பாது.
டயாலிசிஸ் என்றால் என்ன?
இதிலும் இரண்டு வகை உண்டு.
அ. குருதிசார் டயாலிசிஸ்.
இதன் போது உடற்குருதியை வெளியக சுத்திகரிப்பு கருவி ஊடாக செலுத்தி சுத்திகரித்து மீண்டும் உடலுக்குள் செல்ல அனுமதிப்பது.
இதனை செய்வதால்.. பெரிய உயிர் ஆபத்து நிகழும் என்று இல்லை. ஆனால் ஒரு சுத்திகரிப்பு முடிய எடுக்கும் காலம் 3 அல்லது 4 மணி நேரம் நீண்டதாக இருக்கும். சிலருக்கு இதனை விடக் கூடவாகவும் இருக்கலாம். குருதியின் அளவை மற்றும் குருதி வெளியேற்ற உட்புகு வேகத்தைப் பொறுத்தது.
அத்தோடு தேவைக்கு ஏற்ப வாரத்துக்கு.. நான்கு தொடக்கம் இரண்டு தடவைகள் என்று இதனைச் செய்ய நேரிடலாம். இதனை கூடிய அளவு மருத்துவமனையில் வைத்தே செய்வார்கள். சரியான பராமரிப்பு அவசியம் என்பதால். வீட்டில் செய்வதும் உண்டு.. (வசதிகளுக்கு ஏற்ப).
ஆ: Peritoneal dialysis
இதன் போது பை மற்றும் குழாய்கள்.. போன்ற அமைப்புக்களின் உதவியுடன்.. வயிற்றுக் குழியினூடு (peritoneum) திரவங்களை செலுத்தி.. அவை பரிமாறப்பட அனுமதிப்பதன் மூலம்.. தேவையானவை உடலுக்குள் போக தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து அகற்றப்படும். இது ஒரு பழைய முறை என்றாலும்.. தேவைக்கு ஏற்ப பாவிக்கிறார்கள். இதனை வீட்டில் இருந்தும் செய்யலாம்.
இது 30 - 40 நிமிடங்கள் நீடிக்கும். நாள் ஒன்றுக்கு.. 3 தொடக்கம் 4 தடவைகள் செய்வார்கள். அல்லது இரவு முழுவதும் செய்யக் கூடியதாக இருக்கலாம்.
சிறுநீரகத்தின் வேலையை மருத்துவ உபகரணங்கள் மூலமாக வெளியில் இருந்து செய்ய முயற்சிப்பது தான் டயாலிசிஸ்.
2. நாள்பட்ட (நீண்ட கால) நிரந்தர சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney failure – CKF)
இந்த வகை சிறுநீரக செயலிழப்பு மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியே பல்வேறு நோய்களால் செயலிழப்பதால் வருகின்றது.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக நவீன மருத்துவர்கள் கூறுவது
சிறுநீரகங்கள் படிப்படியாக செயலிழக்கும் போது சிறுநீரகங்களின் செயல்திறன் 70 சதவிகிதற்கு கீழ் குறையும் வரை பெரும்பாலானவர்களுக்கு தொந்திரவு என்று எதுவும் வராமலும் இருக்கலாம். அல்லது ஆரம்ப கட்ட தொந்திரவுகளான சோர்வு, களைப்பு, கணுக்கால் வீக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை நாம் அலட்சியப்படுத்த்திருக்கலாம். கீழ்கண்ட அறிகுறிகள் பலவகை சேர்க்கையில் சிறுநீரக செயலிழப்பில் வரலாம்.
1. சிறுநீர் வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்
2. வீக்கம் - கை, கால், வயிறு, முகம் மற்ற பாகங்களில்
3. உயர் இரத்த அழுத்தம்
4. பசி இன்மை, உமட்டல், வாந்தி, விக்கல்
5. வாயில் கசப்புத் தன்மை
6. உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்
7. மன ரிதீயான தொந்திரவுகளான எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம்
8. தலை வலி, உடல் வலி, எலும்புகளில் வலி
மேலும் சிறுநீரக செயலிழப்பிற்கு காரணமாக சிலவற்றை நவீன மருத்துவர்கள் பட்டியிடுகிறார்கள்
சிறுநீரகப்பாதிப்பை கொண்டு வரும் முக்கிய 10 காரணிகள்...
1.புகை.
2.மது.
3.அதிகஉடற்பருமன்.
4.உயர்குருதிஅழுத்தம்.
5.நீரிழிவு.
6.கவனிப்பாரற்றசிறுநீரகதொற்றுக்கள்.
7.சிறுநீர்கல்பிரச்சனை.
8.போதியஅளவுநீர்அருந்தாமை.
9.உணவுப்பழக்கங்கள்.
10. நீண்ட கால இதய நோய்கள்.
சிறுநீரக செயலிழப்புக்கு நவீன மருத்துவம் முன்வைக்கும் சிகிச்சை முறைகள்
1. ஹீமோடயாலிசிஸ் - (Hemodialysis - செயற்கை சிறுநீரக இயந்திர இரத்த சுத்தீகரிப்பு)
2. பெரிடோனியல் டயாலிசிஸ் (Peritoneal Dialysis – வயிற்று ஜவ்வு வழி திரவ சுத்தீகரிப்பு)
3. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – (Kidney Transplantation)
டயாலிசிஸ் (Dialysis) என்ற வார்த்தைக்கு அர்த்தம் அசுத்த இரத்தத்தை செயற்கை முறையில் சுத்தப்படுத்துதல் என்பதாகும். டயாலிசிஸ் சிகிச்சையின் போது சிறுநீரக செயலிழப்பில் உடலில், இரத்ததத்தில் சேரும் அசுத்தங்கள் (கழிவுப்புக்கள்) நீக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.(இதுவும் தற்காலிக நிவாரணம் மட்டுமே)
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஆரோக்யத்துடன் இரண்டு சிறுநீரகங்கள் உள்ள உங்கள் உறவினர் அல்லது நண்பரிடமிருந்து அல்லது விபத்து, மூளை இரத்த கசிவு போன்ற காரணங்களால் மூளை இறப்பு நேரிட்ட நபரிடமிருந்து ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டு உங்களுக்கு பொறுத்தப்படுகின்றது. அது நன்கு வேலை செய்ய ஆரம்பித்தவுடன் உங்கள் செயலிழந்த பழைய சிறுநீரகங்கள் செய்து கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் அது ஏற்று செய்ய ஆரம்பித்து விடுகின்றது. நிறைய சிறுநீரக மாற்று பெற்றவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் தங்களுக்கு முழுவதும் குணமானதாக நினைத்துக் கொள்கின்றனர். இது அப்படியல்ல. சிறுநீரக மாற்று பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுநீரக ஒவ்வாமைக்கு உண்டான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.
நோய் மற்றும் குணம் பற்றி ஹோமியோபதி மருத்துவத்தின் பார்வை
நவீன மருத்துவத்தில் கூறப்படுவது போல் கருவி ஆய்வுகள், உடல் இயங்கியல்,உடல் கூறு இயல் மற்றும் நோய்க்கூறு இயல் ஆய்வுகள் அவசியமில்லை
ஹோமியோபதியில் துயரர்களின் குறிகள் பிரதானமாகக் கருதப்படுகின்றன.துயரர்களின் குறிகளுக்கு இணங்க ஒத்த மருந்தைத் தேர்வு செய்து கொடுத்தால் போதும்.
ஹோமியோபதி நோய்க்கான காரணமாக எதை சொல்கிறது?
வள்ளுவர் சொல்வதுபோல
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
இவர் இங்கே குறிப்பிடுவது, பித்தம் வாதம் மற்றும் கபம் என்ற மூன்றைத்தான். இவை மூன்றும் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும்.இதில் எந்த ஒன்று குறைந்தாலும் (அ) கூடினாலும் நோய் வரும் என்கிறார்.
ஹோமியோபதியில் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரு மனிதனில் உள்ள வாயு.உஷ்ணம் மற்றும் நீர் இம்மூன்றும் சமச்சீர் அளவில் இருக்க வேண்டும். அதுபுறத்தே உள்ள உஷ்ணம், காற்று மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் கூடவோ குறையவோ இல்லாமல் எப்போதும் சீராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் ஹோமியோபதியில் புற அவயங்களின் முழுமைக்குறிகள் (physical general) என்று பார்க்கிறோம். இது மட்டுமில்லாமல் மனம் சார்ந்த பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் (MENTAL GENERAL) ஏனெனில் மனமும் உடலும் சேர்ந்தது தான் முழுமையான மனிதன்.மனம் நோயுறாமல் உடல் நோயுறாது. ஆகவே நோயுற்ற மனிதனை முழுமையாக ஆராய்ந்து மனம் மற்றும் உடல் சார்ந்த தனித்துவக்குறிகளை கணக்கில் எடுத்து மருந்து கொடுக்கும்போது நோயாளியின் ஆரோக்கியம் மீள்கிறது.
சரி நோயாளியை பார்ப்போம்
சிறுநீரகம் செயலிழந்ததாக சொல்லப்பட்ட நோயாளியின் நிலையை முழுதும் ஆராய்ந்து அவரின் தனித்துவத்துக்கு ஒத்த குறிகளை கொண்டு அவருக்கு மருந்து கொடுத்தேன், ஒரு மாத தொடர் கண்காணிப்பில் அவரின் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. முதலில் எழுந்து நிற்க கூட தெம்பு இல்லாமல் ஆம்புலன்ஸில் வந்தவர் இப்போது அவராகவே மருத்துவமனைக்கு நடந்து வருகிறார்.கால் வீக்கம் இல்லை, சிறுநீர் கழிப்பதிலும் எந்த பிரச்சனையுமில்லை. மிக சீக்கிரமாகவே நலமடைந்தார்.
அவர் மகனின் ஆவலின் பேரில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
20-1-14
யூரியா=47.5 MGS/DL NORMAL VALUE 15-40 MGS/DL
கிரியேட்டினின்=1.0 MGS/DL NORMAL VALUE 0.6-1.0 MGS/DL
பரிசோதனை அறிக்கை
சிறுநீர் பரிசோதனை
யூரின் ஆல்புமின் FINE TRACE
தற்போது நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார்,மருந்துகளை நிறுத்திவிட்டேன்.வேறு எந்த மருந்தையும் அவர் எடுப்பதில்லை.
எனது மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகளை அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.
ஹோமியோபதியில் நோய்க்கல்ல மருந்து நோயாளிக்கே என்பது என் கண் முன்னே ஊர்ஜிதமானது.
ஹானிமன் 200 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து உலகுக்கு அளித்த ஹோமியோபதி மருத்துவம் மூலமாக துயரரை நலப்படுத்துவதில் நான் பேரானந்தம் அடைகிறேன்.

