வெங்காய ஊத்தப்பம் ஜாக்கிரதை வீட்டில் அல்ல
பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம் சாப்பிட ஆசைப்படுவர்! இதில் நம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்!
இதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக நம் பாட்டி வைத்தியத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு காய்சலிலிருந்து விரைவாக விடுபட நோயாளியின் தலையின் இருபக்கமும் பாதியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை வைப்பார்கள்!
இந்த வெட்டிய வெங்காயமானது நோயாளியின் கிருமிகளை இழுத்துக்கொள்ளும்! இதனால் நோயாளியும் விரைவாக காய்ச்சலிலிருந்து விடுபடுவார்!
இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெட்டிய வெங்காயம் அதன் அருகில் உள்ள கிருமிகளை வெகு விரைவாக இழுத்து வைத்துக்கொள்ளும் என்பதைத்தான்!
அடுத்து,
தெரிந்துகொள்ளவேண்டிய விவரம், ஹோட்டல்களில் வெங்காயம் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றி!
தரம் குறைந்த ஹோட்டல்களில் அன்றைய தினம் தேவைப்படும் வெங்காயத்தை அனைத்தையும் அன்றைய அதிகாலையில் பொடிசாக வெட்டி வைத்து விடுவார்கள்!
கிட்டதட்ட அந்த வெட்டிய வெங்காயம் இரவு ஹோட்டல் மூடும் வரை பயன்படுத்தும் விதமாகவே தேவையான அளவிற்கு வெட்டி வைத்திருப்பார்கள்! இது காலை முதல் இரவு வரை சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அந்த வெட்டிய வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்!
அதுவும் ரோட்டோரம் திறந்த சாக்கடை இருக்கும் பகுதியில் இந்த வெட்டிய வெங்காயம் இருக்குமாயின் கிருமி கூட்டம் வெங்காயத்தில் நிச்சயம் இருக்கும்!
அப்புறம் நம் வெங்காயப் பிரியர் ஒரு ஆனியன் ஊத்தப்பம் கேட்க்கும்போது ஊத்தப்பத்தை ஊற்றி அதன்மேலே இந்த வெங்காயத்தை தூவிவிடுவார்! என்னதான் அந்த ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டாலும் வெங்காயத்தின் அத்தனை துகல்களும் வெந்துவிட வாய்ப்பில்லை!
இதனால் வெங்காயத்தில் இருந்த கிருமிகள் முழுவதுமாக அழிவதில்லை!
அதோடு மிதமான வெப்பத்தில் அழியாத கிருமிகள் மளமளவென்று இனப்பெருக்கமாகிவிடும்!
இப்படி கிருமிகளின் இனப்பெருக்கமான நிலையில் நம் வெங்காயப் பிரியர் குறிப்பிட்ட நோய்க் கிருமியை உள்வாங்கிக் கொள்கிறார்! அதன் பலனை ஓரிரு நாளில் ஏற்படும் ஆரோக்கிய குறைவை அநுபவிப்பார்!
இதுபோலவே,
வெங்காயம் போட்ட முட்டை ஆம்லெட்டும் வேலை செய்யும்!
ஆகவே,
வீட்டிற்கு வெளியே வெங்காயம் தூவிய உணவுகளை தவிர்ப்பது நல்லது!