காதலின் பிரிவு

ரோஜாவைப் போன்ற அழகிய என் காதல்...
தவராக முட்செடியில் பூத்தது ஏன்???
மெழுகாக நானும் திரியாய் என் காதலும் இருந்தது...
நெருப்பாய் நீ வந்து எரித்து,
என்னையும் உருக்கினாய்...

காதல் சொர்கமென்று இருந்தேனே...
அதில் நரகமும் உண்டு என்றாயே...
வளையலை அணிவித்தாயே..
அது கைதியின் விலங்கென நினைக்கவிலல்லை...

என்னை கைதி ஆக்கினாயே அதனால் கூறுகிறேன்...
உன்னைப் பிரிந்து ஆயுட்தண்டனை கைதியாய் இருப்பதைவிட...
நீ என்னை விட்டுச் சென்றவுடன் மரணதண்டனைக் கைதியாகிறேன்...
என் மரணப்பெட்டியில் முள் இல்லா ரோஜாக்களைத் தூவுங்கள்..
என்னைக் காண வரும் காதலனின் கால்களில் முட்கல் ஏறிவிடக்கூடாது...

எழுதியவர் : கருப்பு ரோஜா (17-Aug-16, 7:51 pm)
சேர்த்தது : கருப்பு ரோஜா
Tanglish : kathalin pirivu
பார்வை : 271

மேலே