கனா கண்டேனடா

கனா கண்டேனடா.....
அமாவாசை இருட்டில்
உன் முகம்
வானில் ....
பௌர்ணமி நிலவில்
உன் சட்டை
சாயம் ....
நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் கூடி போனது
விடி வெள்ளியாய்
உன் நகங்கள் .....
வானம் முழுதும்
கிறுக்கிய
நம் பெயரை கண்டு
அசந்தே போனாயடா..
பூச்செண்டு பூத்த போல்
புன்னகை கண்டு
மயங்கி போனேனடா....
நம் காதலின் நீளம்
போன்று இருக்கும்
வானம் கண்டு
வியந்து போனேனடா ....
இதையெல்லாம்
நீ கவி எழுதி
வாசித்து காட்டும்
போது மீண்டும்
நான் பிறந்தெனடா....
கனா கண்டேனடா....