வரதட்சணை சந்தை

குறைந்த விலைக்காக
சந்தைக்கு செல்லும்
அதே மனிதர்கள்தான் ....

திருமணச் சந்தைகளை ஏற்படுத்தி
பெண் வீட்டாரோடு பேரம் பேசி
ஏராளமான ஏழைப் பெண்களை...
வாங்க மறுப்பது ஏனோ...?
எழில் கன்னி வாழ்க்கைகளை
வீணாக்கத்தானோ..?

அழகை இரசித்து கவிதை வடிக்கும்
ஆண்கள் எல்லாம் - இன்று
பணத்திற்கு அடிமையாகி
வீட்டோடு மாப்பிள்ளையாய்...
இருப்பது ஏனோ? இயலாமை தானோ...?

ஏன் இந்த முரண்பாடு...?
ஆண் மனம் பெண்ணாய்
பெண் இன்று ஆணாய்....

பொன் நகைக்கு மயங்கி
ஆண்மையை விற்கும்
ஆண்கள் இருக்கும்வரை....

இன்ப புன்னகையை பொழியும்
ஏழை பெண்களுக்கில்லை மதிப்பு..!
விலைமகளுக்குத்தான்
ஆண்களிடத்தில் எத்தனை சிறப்பு...?

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Aug-16, 11:45 pm)
பார்வை : 90

மேலே