அவள் அழகு
சோழர் கல்வெட்டில் உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்
எரிந்த மதுரை அன்றே மலர்ந்திருக்கும்
பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில்
உன் பாதம் பட்டிருந்தால்
ஆயிரம் யானைகள் பிடித்த
சேரன் இரும்பொறையின் கரங்களும் வலுவிழக்கும்
உன் விழியின் வசியத்தில்
அவன் சிக்கியிருந்தால்
மூவேந்தர்களுக்குள் கடும் போர் மூண்டிருக்கும்
வெற்றியின் பரிசு பொருள்
நீயாக இருந்திருந்தால்