இப்படிக்கு - ரயில் பயணி
ஓடும் ரயிலில் பிச்சை எடுப்பது என்பது கலை .. விதவிதமான மொழி பேசும் மக்கள் அவர்களிடம் பேசி பிச்சை எடுப்பது அவவ்வளவு சுலபம் அல்ல ..
எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் என்னுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான் அவனிடம் ஒரு 40 வயது மதிப்புடைய ஒரு பெண் மற்றும் அவள் மக்கள் பிச்சை எடுத்தார்கள் .. அவர்கள் கையில் ஆர்மோனியம் இருந்தது .. அவனை நோக்கி வரும்போதே தெலுங்கில் பாடி வந்தார்கள் .
அவன் கண்டுகொள்ளாமல் ஜன்னலை வெறிக்க பார்த்தான் கூட இருந்தவர்கள் அந்த பெண்ணையே பார்த்து கொண்டிருந்தார்கள் .அதே பாட்டை தமிழில் ஹிந்தியில் பாடினார்கள் .. அப்பொழுதும் அவன் தலை இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை கூட இருந்தவர்களும் எதுவும் போடவில்லை .
ஐந்து நிமிடம் பாடிவிட்டு அடுத்த பெட்டிக்கு சென்றுவிட்டார்கள் . மீண்டும் அதே பாட்டை பாட தொடங்கினார்கள்
அப்பொழுது தான் அந்த நண்பன் நிம்மதி அடைந்தான் . அந்த நண்பன் எப்பொழுதுமே இப்படி தான் பகுத்தறியும் புத்தியால் தர்மம் செய்ய மறுப்பான் . அவனை திட்டியும் தீர்த்துவிட்டேன் இருந்தும் என்னுடனே இருக்கிறான் ..
அந்த நண்பன் வேறு யாரும் அல்ல என்னுள் உறங்கிக்கொண்டிருக்கிறான் இதை எழுதும் வேளையில்..!!!
இப்படிக்கு
ரயில் பயணி ...!!