சுதந்திர தின பாடல்
உதிரமும் உயிரும் மண்ணில் விதைத்து
சுதந்திரம் அடைந்தோமே ...
மணிக்கொடி அதனை சுதந்திர காற்றில்
பறக்க விட்டோமே ..
தலைவர் யாவரும் பொது நலன் கருதி
மீட்டு எடுத்தது.... சுதந்திரம் ..சுதந்திரம்..
தியாகங்களை நாட்டுக்காக
நினைவு கூறவே இக்கணம் ...இக்கணம்..
விடுதலை தாகம் விஞ்சி நின்றதால்
வெள்ளையன் ஆட்சி அகன்றது ..
அடிமை கோலம் அறுத்து எறிய
குருதியும் ஆறாய் ஓடியது ..
கொடுங்கோல் ஆட்சியால் அன்னையர் மண்ணிலே
அடிமை ஆக்கி வாட்டினர்
வாழ்க இந்தியா என்று சொன்னாலும்
சிறையில் தூக்கி போட்டனர்
சுதந்திர காற்றை சுவாச காற்றாய் விரும்பிய
நம் முன்னோர்கள்
அடித்து உதைத்து உதிரம் குடித்த
ஆங்கிலேயர்
முப்பது கோடி மக்களிருந்தும்
ஆட்சி இல்லையே நம்மிடம்
ஆயுதம் கொண்டு அடக்கி ஆண்ட
சதி கார அந்நியர்
துயரம் பலவும் தாங்கி நின்ற
தியாக தீபங்களே..
இனிமை சுதந்திரம் நமக்கு கிடைக்க
உருகிய சொந்தங்களே...

