பெண்ணை போற்று அது உன்னை போற்றும் நம் மண்ணை போற்றும்

பெறுநர் :- சமுதாயம்


அனுப்புனர் :- பெண்களின் இதயம்


காதல் செய்யும் பெண்களின் கண்ணீர் என்ன தெரியுமா


வீட்டையும் விட முடியாது
விரும்பியவனையும் விட முடியாது


பெற்றோருக்காக அவனை பிரிந்தால் அவன் தவறாக நினைப்பான் அவள் காதலை


விரும்பியவனுக்காக பெற்றோரை விட்டால் உலகமே தவறாக பேசும் அவள் பழக்கத்தை


ஒரு பெண் எவ்வளவு இன்னல்களைத்தான் அவள் இதயத்தில் சுமப்பால்

இந்த சமுதாயம் என்னும் சாக்கடையில் மிதக்கும் சில சுயநல வாதிகள் மத்தயில் செல்லும் இடமெல்லாம் தொல்லையே


பேருந்து பயணம் இடிக்கவா உரசவா ?
படிக்க செல்லும் இடத்தில் காம பாடமா ?
பணியில் இருக்கும் இடத்தில் ஏற்படும் தொல்லைகளோ
பணி முடிந்து வீதியில் செல்லும் போது ஜொள்ளுவிடும் லொல்லோ ?


காம பசியின் வேட்டையில் ஒவ்வொரு வினாடியும் ஆங்காங்கே ஒவ்வொரு பெண்ணும் பல முறை இறந்து இறந்து பிழைக்கிறாள் என்பதே இன்றைய உண்மை நிலை இதற்க்கு காதலும் ஓர் ஆயுதமே .

இப்படிக்கு
பல இதயங்கள்
படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (28-Aug-16, 9:10 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 232

மேலே