சுமுக்கு அமுக்கு

டேய் சுமுக்கு, எங்கடா போயிட்டச் செல்லம்?
@@@@@@@@
என்னங்க பாட்டிம்மா சுமுக்கு அமுக்குன்னு சத்தம் போட்டுட்டு இருக்கறீங்க?
@@@
அமுக்கி இல்லடி பொன்னி. சுமுக்கைத்தானே நா கூப்படறேன்.
@@@@@@@
யாரு பாட்டிம்மா அந்த 'சுமுக்கு'ங்கறது.
@@######
என்னடி பொன்னி உனக்கு தெரியாத மாதிரி கேக்கற? சுமுக்கு திருக்கடையூர்ல இருக்கறாளே எங் கடசி மவ அவளோட பையன்டி.
@@@@@@#
அடி ஆத்தி சுமுக்குன்னு பேரா. அதான் அந்தப் பேரா வாயில போட்டு அமுக்கிட்டு இருந்தீங்களா?
@####
இந்தக் காலத்தில யாருடி தமிழ்ப் பேர பிள்ளைங்களுக்க வச்சுக்க ஆசப்படறாங்க. எல்லாம் இந்திப் பேருங்கள வச்சுக்கிறத்தத்தாண்டி பெருமையா நெனைக்கறாங்க. எல்லாம் கலிகாலம் பண்ணற வேல....
..உம். .... அப்பிடி இருக்குது!
@@@@@@@@@@@@@@@@@@@@
சுமுக் = சாதகமான/நற்குறியுள்ள முகம். நன்றி:இண்டியாசைல்ட்நேம்ஸ்காம்.
யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி

#@@@@@@@@@@@@@$$$@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (20-Sep-16, 9:48 am)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே