தலித்தின் சிசுவாய்
![](https://eluthu.com/images/loading.gif)
வராமலே போகிறேன்!!!
என்ன ஜாதி நீயென்று
கேட்டு வைப்பாய்
நான் பள்ளி போகையிலே!!!
நான் வராமலே போகிறேன்!!!
என்ன வகையறா நீயென்று
குட்டு வைப்பாய்
நண்பன் வாசல் மிதிக்கையிலே!!!
நான் வராமலே போகிறேன்!!!
என்ன குலம் நீயென்று
தள்ளி வைப்பாய்
கோவில் சாமியின் முன்னிலையிலே!!!
நான் வராமலே போகிறேன்!!!
என்ன இனம் நீயென்று
என் ஆடை கட்டவிழ்ப்பாய்
உன் கர்வத்தின் அரியணையிலே!!!
நான் வராமலே போகிறேன்!!!
என்ன மக்கள் நீயென்று
வெட்டி வீழ்த்திடுவாய்
உன் கவுரவ மடமையிலே!!!
நான் வராமலே போகிறேன்!!!
நான் தலித்தாய் பிறந்து
வீழ்த்தப்படுவதற்கு முன்பே இன்றே
நான் வராமலே போகிறேன்!!!
என் தாயின் கருவறையிலே உதித்து
உன் காலில் மிதிப்படுவதற்கு முன் இன்றே
நான் வராமலே போகிறேன்!!!
சொல்லிவிடு உன் பரம்பரைக்கு
சிதைக்கு தீ வைக்கக்கூட இனி ஒருவன்
முளைக்க மாட்டான் எங்கள் இனத்தில்
நான் வராமலே போகிறேன்!!
அவள் கனவுகளோடு காத்திருக்கட்டும்
அவளிடம் சொல்லாமலே செல்கிறேன்
மூடர் மனங்களின் மங்கிய மனிதத்தை கண்டு
நான் வராமலே போகிறேன்!!!
மன்னிக்கவும் அம்மா,
நீ கண்டெடுத்த கனவை தீயிலே எரிக்க
கூட்டம் ஒன்று காத்திருக்கு....இன்றே
நான் வராமலே போகிறேன்!!!
தலித்தின சிசுவாய் இன்றே
நான் வராமலே போகிறேன்!!!