வலி

என் சிந்தையில்

நடை பெற்ற

சித்து விளையாட்டை

என்னென்று

சொல்ல

இப்படியும் நிகழுமா!?

நிகழ்ந்தது!

முதல்

"சந்திப்பில்"

விழுந்த முடிச்சில்

சிக்கிக் கொண்டேன்

முன்னெப்பவும்

நிகழ்ந்ததில்லை

பின் எப்படி இது?

ஈர்ப்போ?

இல்லை

இது ஈர்பில்லை.

கண்ணை விட்டு

அகன்றதும்,

தாயை

தவற விட்ட

கன்றாய்

அலைபாய்ந்த

மனது!

மீண்டும் காண

ஆவல் கொண்டு,

தேடிய கண்கள்!

பிரதி

எடுத்த பிம்பத்தை,

உள் வாங்கி

தேடிதவித்த

கண்களிள்

ஏமாற்றம்!

அது உணர்த்திய

முதல் வலி!

உணர புரிந்தது,

இது தான்

காதல் என்றும்

அது அளித்த

முதல் பரிசென்றும்

பின் நாளில்

புரிந்தது!

வலிக்கு

மருந்தொன்று

தேட அந்த

மருந்தும்

அவள் தான்

என்று தெரிந்தது!

அவளை

கண்ட பின்

மருந்தின்

மகத்துவம்

புரிந்தது

வலிகளும்

ஓடி மறைந்தது

வலிகள் பின்னர்

வாடிக்கையானது!

அதை வேண்டும்

என நினைத்தது

வேடிக்கையானது!

நான் விரும்பிக்

கேட்டது நிரந்தரமானது,

வலியோடு ஆரம்பித்து

வலியோடு தொடர்ந்து

வலியோடு மடிந்துப்

போக தான்

புற்றுநோயாய்

வளர்ந்ததோ

இந்த காதல்!?
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (20-Sep-16, 8:11 pm)
Tanglish : vali
பார்வை : 502

மேலே