வலிகள்
வலிகள்
நம்முடைய பாடுகள் நமக்குள் இருக்கட்டும்
விம்மும் கண்ணீரைத் துடைப்பதன்றி வேறென்ன செய்ய
யாக்கையும் இற்றுப்போய் நோக்காட்டில் கிடந்துருக
வேக்காட்டுக்கு அரிசியின்றி வெறுமனே கிடக்குமொரு பள்ளியறை. (சமையலறை)
ராத்திரி சாகின் ராவிளக்கில் எண்ணையில்லை
மாற்றி பகல் சாவின் பிணத்துக்குப் போட அரிசியில்லை
காத்திருத்தலில் கை- காலணாவும் கரைந்து போக
யாத்திரை ஒன்றே அறுதியென்று யாசிக்குமொரு பட்டறை
நுளம்பு குடிக்க நின்னுடைய ரத்தமுண்டு
குளம்பு மாக்கள் (விலங்குகள்) ஒன்றையொன்று கொல்வதுண்டு
வளம்தேய்ந்த நாட்டானின் வார்த்தைக்கினி மதிப்பு போக
கிளம்பு கிளம்பென்பார் கேளீரின் கோபத்தோடொரு கட்டளை.
சுசீந்திரன்.
யாக்கை= உடம்பு , நுளம்பு= கொசு , கேளீர் = உறவினர்கள் .