அப்புனா சப்புனா

எதுக்கு பாட்டிம்மா அப்புனா சப்புனா-ன்னு சத்தம் போட்டுட்டு இருக்கறீங்க?
@@@@@@
எம் பேத்திங்களாத்தான்டி கூப்படறண்டி வடிவு.
@@@@@@@
அவுங்க பேரு அப்புனா, சப்புனா-வா?
#@#@@@
ஆமாண்டி வடிவு அவுங்க ரண்டு பேரும் எம் பையனோட ரட்டைப் பொறவி பொண்ணுங்க.நீ தான் வெளிநாட்டுக்குப் போயி அஞ்சு வருசம் கழிச்சு வர்றயே, அதான் அவுங்க பேரு உனக்குத் தெரில.
@@@@@@@@

பாட்டிம்மா எனக்கு இந்தி தெரியும். மாமனும் அத்தையும் அவுஙுகளுக்கு அப்னா, ஸ்வப்னா-ன்னு தான் பேரு வச்சிருப்பாங்க. நீங்க தான் அந்தப் பேருங்கள தப்பா உச்சரிக்கறீங்க.
@@@@@@@@
ஆமாண்டி வடிவு நீ சொல்லற மாதிரி தான் எம் மவனும் மருமவளும் அப்பிடித்தாங் கூப்படறாங்க.
@@@@@@@###############@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. அப்னா என்று பெயர் சூட்டுவார்களா என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான தமிழர்கள் ஊடகத் தாக்கத்தால் உந்தப்பட்டு பொருள் தெரியாத இந்தி/சமஸ்கிருதப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறார்கள். பொதுவாக வட மாநிலங்களிலும் இந்தி/சமஸ்கிருதத்தில் உள்ள பண்பைக் குறிக்கும் (Adjectives) சொற்களையும் வினைச் சொற்களுக்கு வலுவூட்டும் ( Adverbs )சொற்களையும் பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள்.
நாளுக்கு நாள் தமிழ்ப் பெயர்களைப் புறக்கணிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இது தாய்மொழிப் பற்று உள்ளவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்.
######?###???????????????$$@@@@@####
ஸ்வப்னா = கனவைப் போன்ற
அப்னா = என்னுடைய

எழுதியவர் : மலர் (5-Oct-16, 12:50 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே