சிறு நெருப்பு

எப்பொழுதும் உணவருந்தும் கடையில் காலை உணவு கொள்கிறேன். வியாபாரம் கவனிக்க 3 பேர்.
அருகே டிப் டாப் ஆசாமி ஒருவன்
'மூணு இட்லி கொடுங்க'
முதலாளி பெண் அவனை உற்றுக் கவனிக்கிறாள்
'இந்தா அவனுக்கு 4 இட்லி வச்சிக்கொடு' - முதலாளி பெண்
'இல்ல வவுறு சரியில்ல'

'இந்தா உன்னைய பத்தி எனக்கு தெரியாதா, பத்துமணிக்கு பத்து இட்லி, பதினோரு மணிக்கு பதினொரு இட்லின்னு துண்ர ஆளு நீ. ஏன் வவுறு சரியில்லன்னு பொய் சொல்ற. வவுத்து விசயத்துல பொய் சொல்லாத, காசு இல்லேன்னா சாப்ட்டு நாளைக்கு கொடு. படைச்சவன் இனிமே புதுசாவா எழுதப்போறான்'

மெதுவாக அவனைக் கவனிக்கிறேன்.
யாரும் அறியாதவாறு தனது கண்ணாடியினை லேசாக தூக்கி தனது ஆள் காட்டி விரலால் கண்களில் இருந்து பாயத்துடிக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.
சிறு நெருப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
உபதேசங்களும், அதன் காட்சிகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன.
#அரிஷ்டநேமி

எழுதியவர் : அரிஷ்டநேமி (6-Oct-16, 3:00 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : siru neruppu
பார்வை : 443

சிறந்த கட்டுரைகள்

மேலே