சும்மா படிங்க 4

விழித்திடுங்கள் பெற்றோர்களே !

கடந்த காலங்களில், படிக்காத ஏழை பெற்றோர்கள் உருவாக்கியவர்கள்தான் இன்றைய
• மருத்துவர்கள்
• பொறியாளர்கள்
• விஞ்ஞானிகள்
• கணக்கு பதிவியலாளர்கள்
• வழக்கறிஞர்கள்
• கட்டிட கலைஞர்கள்
• சிற்பிகள்
• பேராசிரியர்கள்
இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்கும் அறிவில் சிறந்தவர்கள் மற்றும் சாதைனையளர்கள். இவர்களை நாம் முதல் தரவரிசையை சார்ந்தவர்கள் (Group ‘A’) என்று வைத்துக் கொள்வோம்..

இந்த முதல் தரவரிசையை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படிததப் பிறகு, தங்களது சொந்த முயற்சியாலும் உழைப்பினாலும் போராடி தங்களை தனித்துவமிக்க ஆளுமைகளாக, சாதனையாளர்களாக உரருவாக்கிக் கொண்டார்கள்.

இவர்களில் பெரும்பான்மையனவர்கள்
 பள்ளிக்கு வெறுங்காலில் நடந்து சென்றவர்கள்
 தோட்டம் மற்றும் வயல்களுக்கு சென்றவர்கள்
 தண்ணீர் மற்றும் விறகு சுமந்தவர்கள்
 கால்நடைகளை கவனித்துக் கொண்டவர்கள்
 பள்ளி நேரம் முடிந்த பிறகு பலஇடங்களில் வேலை செய்தும், வியாபாரம் செய்தும் நாட்களை நகர்த்தியவர்கள்.

இப்பொழுது இந்த முதல் தரவரிசை (Group ‘A’) குழந்தைகள் பெற்றோர்கள் ஆகிவிட்டனர். ஆனால் இந்த முதல் தரவரிசை (Group ‘A’) பெற்றோர்கள் இரண்டாம் தரவரிசை (Group B) குழந்தைகளை உருவாக்குகிறார்கள்.

இரண்டாம் தரவரிசை (Group B) குழந்தைகள்
 அதிகமான சலுகை (செல்லம்) கட்டப்பட்டவர்கள்
 மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரி வரை தங்களது வீட்டுப் பாடங்களை செய்து முடிக்க பெற்றோர்களின் உதவியை நாடியவர்கள்
 அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் வாகனங்களில் சென்று கல்வி கற்றவர்கள் அல்லது படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள்
 இவர்கள் பள்ளி நேரம் முடிந்த பின்பு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து முழுநேரமும் பின்னிரவுவரை திரைப்படங்கள் பார்க்கலாம்
 இவர்கள் இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் போன்று பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள்.
 இவர்கள் வீட்டில் எந்தவொரு வேலையையும் செய்ய மாட்டார்கள்
 உணவருந்தும் மேசைக்கு உணவு வரும், உண்டு முடித்தவுடன் தட்டை வாங்கி கழுவி வைப்பது அம்மா அல்லது வேலையாளாக இருப்பார்.
 இவர்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளும் சொகுசு வாகனங்களும் வழங்கப்பட்டிருக்கும்
 சொந்த செலவுகள் என்று சொல்லி தேவையற்ற செலவுகள் செய்து பெற்றோர்களின் பணத்தை அதிகமாக வீணாக்கியவர்கள்
 எல்லா வேலைகளையும் பெற்றோகளின் உதவியுடனே செய்து முடிப்பவர்கள்

இவ்வளவு செய்தும் சிலரால் மட்டுமே சரியாக எழுதவும் பேசவும் முடிகிறது..

முதல் தரவரிசை (Group ‘A’) பெற்றோர்கள் தங்களது பெற்றோர்களையும் குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் வளர்த்த குழந்தைகள் இரண்டாம் தரவரிசையில் இருப்பவர்களாகி (Group B) முப்பது வயதை கடந்தும் (30+) சொந்த காலில் நிற்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் !!

அவர்களால் தங்கது பிரச்சினைகளை தனியாக நின்று எதிர்கொள்ள முடியவில்லை ஏனெனில் அவர்கள் இவ்வளவு காலமும் தங்களது முதல் தரவரிசை (Group ‘A’) பெற்றோர்களின் துணைக்கொண்டுதான் யோசிக்கவும் பிரச்சினைகளை தீர்க்கவும் பழகியிருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுக்கும், பெற்றோர்களுக்கும் அல்லது இந்த சமுதாயத்திற்கும் எந்த விதத்திலும் உதவ முடியாது. மேலும் இந்த உலகத்துடன் போராடி வெல்ல பெற்றோர்களை கைவிட்டுவிட்டு வேரு திசைநோக்கி சென்று விடுகின்றனர்.

சரி, இப்பொழுது பெற்றோகளாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்
 உங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக சலுகை (செல்லம்) காட்டுவதையும் தேவையில்லாமல் உதவி செய்வதையும் நிறுத்துங்கள்
 அவர்கள் மெய்யறிவு, புத்திசாலித்தனம் மற்றும் தன்னம்பிக்கையுடன் வளர வழிவகை செய்யுங்கள்
 அவர்கள் உலகத்தின் உண்மைகளையும் நிதர்சனங்களையும் எதிர்கொள்ளட்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காத தனிமனிதாக வளரக் கற்றுக் கொடுங்கள்.

 மேலும்
o கடவுள் பயம்
o பிறரை மதித்தல்
o சுயத்தின்மீது நம்பிக்கை வைத்தல்
ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்

 பெற்றோர்களே, உங்களது குழந்தைகளை ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாக உருவாக்குங்கள். அவர்கள் சுயத்திற்கும், உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் உபயோகமுள்ளவர்களாக இருக்கட்டும் உபயோகமற்றவர்களாக அல்ல.

(முகநூல் பதிவிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது - நன்றி முகநூல் )

எழுதியவர் : sunflower (10-Oct-16, 8:48 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 321

மேலே