விழித்தெழு தமிழா
மொழி எதற்காக...?
தன் உணர்வினைப் பகிர்வதற்கென உருவாக்கப்பட்ட வழிமுறை
எம்தமிழுக்கு அதிலுண்டு எம்மொழியும் எட்டிடாத தலைமுறை...
அவ்வளவே...!
மிருகங்களின் மொழிகூட மிதமாக உணரமுடிகிறது
சில பிறமொழி மனிதர்களை மட்டும்தான் உணரமுடிவதில்லை...
சில பிறமொழிகளின் பரிணாமம் பல மனிதர்களுக்குப் பாடமாய் அமைய
பல கலப்புமொழிகள் பரிமாற்றம் செய்யப்படாததன் விளைவுதான் அவர்களை மதம்பிடிக்க வைக்கின்றது...
மொழி, இனம், நாடென உலகில் ஆயிரம் மனிதப் பிறவிகள் மடிந்திருக்கலாம்
எம்மினத்தவர் மட்டும் இதற்காக பலியாக்கப்பட்டது எத்தனைகோடி என்னிட முடியுமா...?
புரிதலில் எம்மொழி பிறர்க்கு புதிராய் உணரும்போது
அறிந்திடாத அயல்தேசமொழி அசுரனாய் அவதரிக்கிறது...
எல்லைகடந்து தொல்லைகொடுக்கும் குள்ளநரிக்கூட்டத்திற்கு
பல்லையுடைத்து பரணியிலிட்டால்தான் அவர்களுக்குநம் வீரம்புரியும்...
என்நாடு, என்மக்கள் எனக்கூறும் சில இந்திய மேதாவிகள்கூட
உம்மொழி இதுவென ஒதுக்கியே நம்மை வைத்திருக்க...
இழிசொல் எம் இனத்திற்கா...?
பழிச்சொல் எம் தமிழிற்கா...?
மதவாத அரசியலே...!
பல மாநிலங்களுக்கிடையில் எங்களுக்கெதிராய் கலவரத்தை தூண்டிவிட்டு
சிலநூறு வருடங்கள் நீங்கள் சிறப்பாகவா வாழ்ந்திடுவீர்...?
இனவாத அரக்கர்களே...!
தனிநாடு தமிழுக்கில்லை என்பதனால் தரம்குறைத்து எண்ணாதீர்
தமிழில்லாநாடும் தரணியிலில்லை என்பதனை நீயும் மறவாதீர்...!
இலக்கணமறியா இவ்விடத்தில் மட்டும்தான் எம்மொழியில் உங்களுக்கு வேறுபாடு
இலக்கியமறிந்த எம் ஈழத்தமிழ் மக்களிடம்பேசிடப் புரியும் நயம்பொருந்திய எம்தமிழின் மொழிப்பாடு...
#விடியல்_நேரமிது #விழித்தெழு_தமிழா