இடம் கொஞ்சம் தருவாயா

என் இதயத்தை ஈர்த்திடும்
காந்த கண்ணழகியே...
என் உயிரை தொலைத்துவிட்டேன்
உன் அழகின் கூட்டத்தில்...
இனி என் வாழ்வின் மறுபக்க
காகிதம் நீயடி...
இனி உன் நினைவில்லாமல்
என் வாழ்க்கை நகர்ந்திடாதடி...

என் இதயத்தை ஈர்த்தவளே
என்னுள் கரைந்தவளே...
உன்னுள் பாதியாய்...
இருந்திடவே உன் இதயத்தில்
இடம் கொஞ்சம் தருவாயா..?

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (14-Oct-16, 12:22 am)
சேர்த்தது : தினேஷ்குமார்
பார்வை : 214

மேலே