பாதையில் கண்ட பவளக்கொடி

கொடியிடைமடிய கோலமிடும் மலரிவளை
நடைவழி கடக்கும் காளையர்கள் இமைமூடாது காண்பதேனோ...?

கோவையிதழ் உதடுகள் கொய்த தேன்துளிக் கோப்பைதனை
வளைத்துக்கொண்ட சிட்டெறும்புக்கூட்டம் மயங்குவதேனோ...?

பனிபடர்ந்த புற்களைதழுவிய இன்தென்றலும்கூட ஒன்றினைந்து
தன்வழிமறந்து உன்வீடு வந்துசேர்ந்ததேனோ...?

சிற்றிடைசுற்றிய சேலைதனில் பற்றிக்கொள்ள பறந்துவந்த பட்டாம்பூச்சிகளெல்லாம்
வெற்றிடமாய் கிடக்கும் உன் வெளிர்மஞ்சள் தேகத்தினை சுற்றிக்கொண்டே மடிவதேனோ...?

உலகுக்கே ஒளிகொடுக்கும் கதிரவனே உனைக்கண்டு
ஓரிடம் ஒளிந்துநின்று உனையே உற்று நோக்குவதேனோ...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (18-Oct-16, 9:44 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 78

மேலே