மறத் தமிழன்

ஆண்டவன் சோதிக்க மட்டும்தான் செய்வானா? சோதனையே வாழ்வாக எண்ணி வாழும் தமிழனுக்கு பயம் மட்டும்தான் நெஞ்ஜோடு ஒட்டியிருக்கிறது. மேலும் சோதனையை தாங்க முடியாமல் கோபம் அடைந்து மற்றவர்களை துன்பப்படுத்தி வாழாமலே மடிந்தான் தமிழன். ஏன் இந்த நிலை தமிழனுக்கு. தனக்கு என்று ஒரு நாடு இல்லாமல் அல்லோலப்பட்டு கொண்டுதான் இருக்கிறான் தமிழன். இன்னும் எத்தனை காலம் தான் இந்த துன்பம். தனக்கென்று அதாவது தமிழனுக்கென ஒரு நாடு இருந்தால், அந்நாட்டு அரசாங்கம் தரும் சலுகைகள் பாரா பட்சம் இல்லாமல் கிடைக்கபெற செய்வான் அல்லவா? அக்காலத்தில் ராஜ ராஜ சோழன் பல நாடுகளை கைப்பற்றினான் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஏன் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கும் பல இடங்களின் பெயர்கள் தமிழ் சொற்களை கொண்டே அமைக்க பட்டிருக்கிறது என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கின்றோம். அக்காலத்தில் சோழ மன்னன் கடாரத்தை ஆண்டான், கோயிலை கட்டினான் என்று மார் தட்டி பெருமை மட்டுமே பட முடிந்தது தமிழனால்.

அக்காலத்தில் சோழ மன்னனால் ஆண்ட தமிழ் நாடுகள் எங்கே? எப்படி கைவிடப்பட்டன என்று யாராலும் சொல்ல முடியவில்லை. தனக்கென சொந்தமாக நாடு வேண்டும் தமிழனுக்கு என ஒரு நாடு வேண்டும் என்று போராடி உயிர் நீத்த தமிழ் தலைவன் பிரபாகரனின் போராட்டம் நியாயமானதுதான் என்று பல தமிழனுக்கு புரியவில்லை. தமிழன் எல்லா நாட்டிலும் வாழ்கிறான் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்கிறான் என்பதுதான் முக்கியம்.

தமிழன் இன்று எந்தவொரு உரிமையும் இல்லாமல் நாடு இல்லாமல் பல அவதிகள் பட்டு அவமானப்பட்டு ஏதோ நாமும் வாழ்கிறோம் என்று ஒப்புக்கு இருக்கிறோம். இந்நாட்டில் இப்பவும் உரிமைமைக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். வேறொரு இனத்தவரின் நாட்டில் பிறந்து உரிமைக்காக அந்த நாட்டு அரசாங்கத்தை குறை கூறுவதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வீடு, ஒரு வாகனம் இதை தமிழன் வாங்கி கடனை கட்டி முடிப்பதற்கே போராட்டமாக இருக்கிறது. ஒரு மனிதனின் அத்தியாவச தேவையே தங்குவதற்கு ஒரு வீடும் போக்குவரத்திற்கு ஒரு வாகனமும்தான்; இதை வாழ்வில் கிடைக்கபெற தமிழனுக்கு குதிரை கொம்பாக இருக்கிறதே?

தமிழனுக்கு அரசாங்க பழ்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதற்கும் அப்படியே கிடைத்தால் அரசாங்க நிறுவனங்களில் வேலை கிடைக்க பெறுவதற்கும் அப்படியே கிடைத்தால் உயரிய பதவிகள் கிடைப்பதில்லை. தமிழன் ஆள பிறந்தவன் என்று சொன்ன காலம் போய் இப்பொழுது ஆள படுகிறான். தமிழனுக்கு என்று சொந்தமாக நாடு ஒன்று இருந்தால் மட்டுமே விடிவு காலம்.

எழுதியவர் : பவநி (19-Oct-16, 8:11 pm)
பார்வை : 286

சிறந்த கட்டுரைகள்

மேலே