ஆனந்தக்கண்ணீர் பேசுதே

எனக்கு கிடைக்காத ஒன்று,
என் பிள்ளைக்கு கிடைக்கும்போது,
முகம் சந்தோஷத்தில் பூத்தாலும் ,
மனமோ ஏக்கத்தில் ஏறுகிறது...
நான் செய்த குறும்புச் சேட்டைகளை,
என் பிள்ளை செய்கிறபோது,
முகம் சிரிப்பில் திழைத்தாலும்,
மனமோ கண்ணீரால் கனக்கிறது....
உயிரின் கிளைகளாய் உறவுகள் அமைந்தால்,
சந்தோஷப் பறவைகள் வரும்....வேடந்தாங்கலாய்!!