மௌனமாய் கொன்றவள்
மௌனமாய் கொன்றவள்
(என் மனைவி மௌனமாய் இருந்தால் என் மீது கோபம் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் .அப்படி ஒரு தருணத்தில் அவளுக்காக நான் எழுதிய கவிதை )
இப்போதெல்லாம் கோபத்தால்
ஒரு பாறையைப்போல்
இறுகிக்கொண்டிருக்கிறது
உன் முகம்
இலையுதிர் காலம் முடிந்தால்
வசந்தகாலம்
உன் ஊடல் முடிந்தால்
வசந்தம் வருமென காத்திருக்கிறேன்
உன் மனக்குறை சொல்லிவிடு
பகிர்தல் தீர்வின் முதல் படி
ஒவ்வொரு மௌன யுத்தத்திர்க்குப்பின்னும்
சத்தியம் செய்கிறாய்
"சண்டையிடமாட்டேன்"
எனக்கு தெரியும்
சமாதானக்கொடியை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
தயவு செய்து
கோபப்படு அல்லது
அழுதுவிடு
சண்டையிடு அல்லது
சாபமிடு
மலரினும் மெல்லியது என் மனம்
தாங்காது உன் மௌனம்.
MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்