mullairajan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : mullairajan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 26 |
நகர்வு...
அதிகம் பேசாதீர்கள் ,அதிர்ந்து சிரிக்காதீர்கள்
அப்பா அம்மாவுக்கு அறவே பிடிக்காது -அவளின் கட்டளை
என் அண்ணன் ,என் தம்பி உங்களைப்போல் அல்ல
ஏதாவது ஏடாகூடம் வேண்டாம்
பிறந்தநாள் பரிசுப்பொருளை பிரிக்காமலேயே
பிறந்த வீடாயிருந்தால் நீட்டி முழக்குவாள்
பண்டிகை நாட்களில் அவள் வீட்டில்
யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் பட்டியலிடுவாள்
எனக்கென்ன பிடிக்கும் பிள்ளைகளுக்கு
என்ன பிடிக்கும் அறவே அறியாள்
இருபதுக்கும் மேற்பட்ட எங்கள் காதல் கடிதங்களை
எரிப்பதாய் முடிவெடுத்த அந்நாளில்
என் கடிதம் இரண்டு மட்டுமாவது இருக்கட்டுமே என்றேன்
திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் என
உன்னோடு
பேசிவிடுவதென
முடிவெடுத்து
அலை பேசியை எடுக்கிறேன்
எப்படி முடியும்
பேசக் கூடாதென
உனது அலைபேசி எண்ணை நீக்கியது
நான் தானே
யாரிடமாவது கேட்டுப்
பெறலாமா யோசிக்கிறேன்
நான் பேசிக்கொண்டே இருப்பதும்
நீ மௌனமாய் கேட்டுக் கொண்டே இருப்பதும்
நினைவில் வந்து போகிறது
முரண்பாடில்லா உறவு
சாத்தியமற்றது என்பதை
உணர்கிறேன்
நம்பிரிவுக்கான
புள்ளியை உற்றுநோக்குகிறேன்
அது முற்றிலும் கரைந்து விட்டிருந்தது
நெல்லின் உமி சிறிது
நீங்கினாலும் மீண்டும் சேரமுடியுமா ?
முன்பு நீ சொன்னது நினைவுக்கு வர
மீண்டும் உறவைத் தொடர
வேண்டாம் என முடிவெடுத்து
அமைதியாகிறேன்
என் பிரியமான அப்பா.
Post
எனது கவிதைகளை எழுதி எப்படி சமர்ப்பிப்பது ..புள்ளிகள் எப்படி பெறுவது
சொல்லாத சொல்
ஆகாய நீலத்தில்
அழகழகாய்,வித விதமாய்
நீ உடையணிகையில்
எப்படி உணர்ந்தாயோ
எனக்குப் பிடிக்குமென
ஓவியன் கூட
தடுமாறிப்போவான் உன்னழகில்
வண்ணங்கள் தேடி
எண்ணங்களில் குழம்பி
எனைப்பேசு எனைப்பேசு என சொற்கள் வரிசைகட்டி நிற்கையில்
பல நேரங்களில் சொற்கள்
தவிர்த்து புன்னகையையே
பதிலாய் தருவாய்
அந்தக் கண்களில் மட்டும்
பார்வையையும்,மொழியையும் எப்படித்தான் ஒருங்கேத் தருவாயோ
பூமிக்கும் வலிக்குமோ என அதிராமல் நடக்கும் அழகைப் போல் மென்மையோ உந்தன் மனசு
உன்னப்படைக்க மட்டுமே பிரம்மன் கால அளவை
நீட்டிக்கொண்டானே
யோசித்து யோசித்து
திக்கித் திணறி
சொல்ல நினைத்தை மறைத்து எதை
தீரா வினாக்கள்
உன் மீதான வெறுப்பின் ஆரம்பம் எது என தொடங்கையில்
உன்னை வெறுத்துவிட்டேன் என்பாயோ?
தீர்வுக்காய் பேசத்தொடங்கி
தீராப்பிரச்சனையில்
சிக்கிக்கொள்வேனோ?
குழந்தை என கொண்டாடும் எனில்
குழந்தையா கொண்டாடுவதற்கு என்ற வினா?
சுவாரசியப் பேச்சோடு நிறுத்திவிடுவோம் என
தொடங்கையில்
எப்படியோ புகுந்து விடுமோ பழைய கசப்பான நிகழ்வும்?
பேசுவதை தவிர்க்கலாம் எனில் மொத்தமாய்
முடிந்துவிடுமோ என்ற அச்சமோ?
தள்ளியிருந்தால் எதுவும் அழகோ?
சூரியன்,நிலா,கடல் போல்?
பூ.முல்லைராஜன்
மழை மேகம் போல்
அலை திரண்டு வந்தாய்...
என்னை ஆட்கொண்டாய் ஆழ்மனதில்
அகதியாக அலைகிறேன்
மன சிறையில் மாள்கிறேன்...
காதல் என்னும் மரண பரிச்சையில்
இருந்து மீள துடிக்கிறேன்
துயில் போல் உன் கண்கள் என்னைத் தழுவிய போதும்
துளிர்க்கிறேன் மீண்டும் மீண்டும்
தீயில்லை என்றாலும்
தீபம் போல் எரிகிறேன்
உன் அன்பில் நனைகையில்
வெறுத்த நாட்களை நினைக்கையில்
விழியோரம் வழிந்தோடும் கண்ணீர்
கனமாய் என் நெஞ்சில் விழுகிறது...
துவண்ட என்னை அன்னை போல்
அனைத்து கொள்வாயே அன்பே
உன்னை வெறுக்க நினைத்தேன்
என்னை உள்ளம் உருக அணைத்தாய்
உயிரே என் உயிரே
உன்னை விரும்பி அணைக்க
இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் .
கொஞ்சம் பேசாமல் இருந்திருக்கலாம்
கொஞ்சம் தெளிவாக பேசியிருக்கலாம்
துணைநின்ற உறவுகளுக்கு உதவியிருக்கலாம்
தூரநின்ற உறவுகளை நிறுத்தியிருக்கலாம்
பூங்காக்களில் காத்திருத்தல் சுகமென்று அறிந்த நான்
புடவைக் கடையில் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம்
கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் நான்-அவள்
கருத்தையும் கொஞ்சம் அறிந்திருக்கலாம்
அவள் கண் விழிக்கும் வேளையில்
ஒரு கோப்பை தேநீருடன் நின்றிருக்கலாம்
சண்டையிடும் நாட்களில்-என்
பிள்ளைகள் சுமந்த அவளை
பிள்ளைகளுள் ஒன்றாய் எண்ணியிருக்கலாம்
பள்ளியை விட்டு வந்த பிள்ளைகளிடம்
வீட்
அந்த நதிக்கரைப் புளியமரக் கொம்பில்
தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் இன்னமும்
ஆடிக்கொண்டிருக்கிறது உன் ஞாபகம்.
கொள்ளையர்கள் அகழ்ந்தெடுத்தப் பின்னாலும்
நதியின் அடியில் குவியும் மணலாய்
சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது
நம் காதலின் துயரம் .
விதியின் மரக்கிளையில் பிரிந்துநிற்கும்
ஏகாந்தப் பறவை தன் ஞாபக அலகுகளால்
கொத்துகின்ற காலமெல்லாம்
துடிக்கிறது இதயப் புழு,
உன்னவனோடு நீ அக்கரையிலும்
என்னவளோடு நான் இக்கரையிலும்
குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் நடக்க
யாருக்கும் சொல்லாமல்
நதிநீராய் மௌனமாய் அழுதோடும்
நம் காதல் மட்டும் அனாதையாய்..
வாழ்வை வெறுத்துத் தன்னில் வ
மௌனமாய் கொன்றவள்
(என் மனைவி மௌனமாய் இருந்தால் என் மீது கோபம் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் .அப்படி ஒரு தருணத்தில் அவளுக்காக நான் எழுதிய கவிதை )
இப்போதெல்லாம் கோபத்தால்
ஒரு பாறையைப்போல்
இறுகிக்கொண்டிருக்கிறது
உன் முகம்
இலையுதிர் காலம் முடிந்தால்
வசந்தகாலம்
உன் ஊடல் முடிந்தால்
வசந்தம் வருமென காத்திருக்கிறேன்
உன் மனக்குறை சொல்லிவிடு
பகிர்தல் தீர்வின் முதல் படி
ஒவ்வொரு மௌன யுத்தத்திர்க்குப்பின்னும்
சத்தியம் செய்கிறாய்
"சண்டையிடமாட்டேன்"
எனக்கு தெரியும்
சமாதானக்கொடியை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
தயவு செய்து
கோபப்படு அல்லது
அழுதுவிடு
சண்டையிடு அல்லது
சாபமிடு
ம
இயற்கை
புல்லாங்குழலுக்கு கட்டுப்படும் காற்று
உன் கைகளுக்குள் அகப்படுமா!
கடல்நீரை குடிநீராக்கும் அறிவியல்
மழையே நீ எங்கு
கற்றாய் என கேட்டதுண்டா !
மரங்களை சாய்த்துப் போடும் காற்று
நாணலிடம் காட்டும் கருணையை
நீ அறிந்ததுண்டா !
பூக்கள் பூப்பெய்தினால் அதன் வண்ணம்
என்ற உண்மையை உணர்ந்ததுண்டா !
மகரந்த சேர்க்கை நிகழ்த்தும்
வண்டுகளை நீ
வாழ்த்தியதுண்டா!
சூரியனும் சந்திரனும்
கண்ணாமூச்சி
ஆடும் அழகை
கண்டதுண்டா!
ஆகாயம் முழுக்க
அள்ளிதெளித்த
நட்சத்திரம் பற்றி
யாரிடமாவது
அதிசயத்ததுண்டா !
வீடு உன் உலகம் என்றால்
அர்த்தமற்றது உன் வாழ்க்கை
உலகம் உன் வீடு என்றால்
அர்த்தமுள்ளத
இதோ முதல் கவிதை.......!!!! பிரசவிக்க போகிறது......!!!!