தீரா வினாக்கள்

தீரா வினாக்கள்

தீரா வினாக்கள்

உன் மீதான வெறுப்பின் ஆரம்பம் எது என தொடங்கையில்
உன்னை வெறுத்துவிட்டேன் என்பாயோ?

தீர்வுக்காய் பேசத்தொடங்கி
தீராப்பிரச்சனையில்
சிக்கிக்கொள்வேனோ?

குழந்தை என கொண்டாடும் எனில்
குழந்தையா கொண்டாடுவதற்கு என்ற வினா?

சுவாரசியப் பேச்சோடு நிறுத்திவிடுவோம் என
தொடங்கையில்
எப்படியோ புகுந்து விடுமோ பழைய கசப்பான நிகழ்வும்?

பேசுவதை தவிர்க்கலாம் எனில் மொத்தமாய்
முடிந்துவிடுமோ என்ற அச்சமோ?

தள்ளியிருந்தால் எதுவும் அழகோ?
சூரியன்,நிலா,கடல் போல்?

பூ.முல்லைராஜன்

எழுதியவர் : பூ.முல்லைராஜன் (10-Jan-17, 10:43 am)
சேர்த்தது : mullairajan
Tanglish : theeraa vinakkal
பார்வை : 153

மேலே