அவளிடம் இருந்து விடுபட முடியவில்லை
மழை மேகம் போல்
அலை திரண்டு வந்தாய்...
என்னை ஆட்கொண்டாய் ஆழ்மனதில்
அகதியாக அலைகிறேன்
மன சிறையில் மாள்கிறேன்...
காதல் என்னும் மரண பரிச்சையில்
இருந்து மீள துடிக்கிறேன்
துயில் போல் உன் கண்கள் என்னைத் தழுவிய போதும்
துளிர்க்கிறேன் மீண்டும் மீண்டும்
தீயில்லை என்றாலும்
தீபம் போல் எரிகிறேன்
உன் அன்பில் நனைகையில்
வெறுத்த நாட்களை நினைக்கையில்
விழியோரம் வழிந்தோடும் கண்ணீர்
கனமாய் என் நெஞ்சில் விழுகிறது...
துவண்ட என்னை அன்னை போல்
அனைத்து கொள்வாயே அன்பே
உன்னை வெறுக்க நினைத்தேன்
என்னை உள்ளம் உருக அணைத்தாய்
உயிரே என் உயிரே
உன்னை விரும்பி அணைக்கிறேன்
என் விதிகளை மறக்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை நினைக்கிறேன்
விடை தெரியாமல் தவிக்கிறேன்…..
எப்படி
என்னை அடைந்தாய் என்று,,,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
