சந்தோஷ சாம்ராஜ்ஜியம்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது
திருமண விழாக்களில்
நண்பர்களின் சந்திப்பு
சொர்க்கத்தை
உணர வைக்கிறது..

கல்லூரிக் காலம்...
நண்பர்களின்
அக்கா அல்லது அண்ணன்
திருமணங்களுக்கு
சென்று வந்தோம்...

அதற்குப் பின்
ஒவ்வொரு நண்பன்
கல்யாணத்திற்கும்
சென்று வந்தோம்...

இது நண்பர்களின்
செல்லங்கள் திருமணங்கள்
நடக்கும் சீசன்...
சந்தோஷத் தருணங்கள்
வயதாகியும் வந்து
கொண்டே இருக்கிறது...

பால் ராபர்ட் இல்லத்
திருமண விழா
அது அவனது முதல்
செல்லத்தின் கல்யாணத்
திருவிழா...
கல்லூரி உதவிப்
பேராசிரியரும்
மென்பொருள் கணினிப்
பொறியாளரும்
கைகோர்க்கும் அற்புத விழா...

இனி கீர்த்தனா பாலின்
வகுப்புகளில்
ஆல்ஃப்ரட் சாமுவேலின்
ஒருங்கிணைப்பில்
வேலை வாய்ப்புக்
கலந்த செயல் முறைக்
கல்விக்குக் குறைவிருக்காது...

ஆல்ஃப்ரட் சாமுவேலின்
மென்பொருள் உருவாக்கத்தில்
கீர்த்தனா பாலின்
ஒத்துழைப்பில்
புத்தகக் குறிப்புகள்
இலவசமாய் எளிதாய்க்
கிடைக்காமல் இருக்காது...

நேற்று உலக அளவில்
அதிகம் பேருடன்
மகிழ்வோடு பேசிய அபூர்வ மனிதன் பால் ராபர்ட்
ஆகத்தான் இருக்கும்...
பேச்சில் இனிமை
செயலில் அவ்வளவு
தெளிவும் உற்சாகமும்...
காண்போரை
மிரள வைத்தது...

பிரிய நண்பன் பிரேமானந்த்திடம்
பேசிக்கொண்டதில்
ஜிஸிஇ பொருநை இல்லம்
அடுத்தடுத்த அறைகளில்
தங்கி இருந்த ஞாபகங்கள்
வந்து போனது...

கீழ்ப்பாக்கம் எல் ஐ டி இ
ஆடிட்டோரியம் எழுபது அடி
அகலத்தில் இடைத்தூண்கள்
இல்லாமல் கட்டப்பட்ட அரங்கு
அதனைக்ககட்டிய
அபூர்வப் பொறியாளன்
நண்பன் பால் நேச ராஜன்
அந்த பிரம்மாண்ட அரங்கில்
நடந்த பிரம்மாண்ட திருமணம்
அவன் கண்களில் தெரிந்தது
அளவில்லா மகிழ்ச்சி...

ஜெயமோகன் அகம்
புறம் மகிழ்வு கொண்டு
அட்மின் வேலையை
அங்கும் பார்த்தான்
அன்பளிப்பை அன்பாய்
அளித்தது உட்பட...

மரியதாஸ் ஆனந்த்
குடும்பசகிதம் வந்து
சிறப்பித்தான்...
அவன் தலைமுடி
குறைவில் அதிகரித்திருந்தது
தோற்றப் பொலிவு...

நேரம் கழித்து வந்தான்
லாரன்ஸ்... நண்பர்களைக்
கண்ட பின் அவன்
உள்ளம் களித்துச் சென்றான்
தாமதத்தை அன்பளிப்பின்
பங்களிப்பால் ஈடு செய்தான்...

கோம்ஸ் கொஞ்சமாய்ப்
பேசினார்... நிறையச்
சிரித்தார்...வாட்ஸப்பில்
தெரித்த பன்முகம் மாறி
நெல்லை ஜிஸிஇ சுபாவம்
சற்றே எட்டிப் பார்த்தது...
மகளிர் அணி ஒன்று
அவசரமாய் உருவாகியது...
அந்தோணி விஜயா
நண்பர்களோடு
அதிகம் பேசி அன்பு
பாராட்டினார்...
வாழ்வில் பதவியில்
உயர்ந்தாலும் குழந்தைத்தனம்
மட்டும் அப்படியே
அடையாளம் மாறாமல்...

மின்வாரியப் பொறியாளன்
ஜெயதாஸ் கல்லூரியில்
பேசியதை விட
அதிகம் பேசினான் அதுவும்
அமர்க்களமாய்ப் பேசினான்...

அண்ணா யுனிவர்சிட்டி
முருகன்...நான் தொழில்
நுட்பக் கல்வி இயக்குனரகம்
செல்லும்போது
பலமுறை சந்தித்துள்ளேன்
அன்பிலும் அமைதியிலும்
தனிமனித நேர்த்தியிலும்
மிகவும் உயர்ந்தவன்...
முருகனின் புன்னகை
கலந்த வரவேற்பு
ஆண்டுகள் பல கடந்தும்
அப்படியே இருக்கிறது...

செல்வ வினாயகத்திற்கு
உற்சாகத்தின் மிகுதியில்
அவன் பயணித்த
பெருங்களத்தூர்-கீழ்ப்பாக்கம்
கல்லெறி தூரம் ஆனது...
மாலை ஐந்து மணி
நேரங்கள் ஒருசில
நிமிடங்களாய்த் தோன்றியது..

நான் தங்கியிருந்த
அறைக்கு வந்திருந்த
ஜெமோ குமாருடன்
இனிமையாய்க் கதைகள்
பல பேசி சென்னை
வீதிகளில் பயணித்து
திருமணத்துக்குச்சென்று
வந்தது சமீபத்திய
மகிழ்ச்சிகளின்
சூப்பர்லேடிவ் டிகிரி...

நிறைய வீட்டுக்
கல்யாணத்தில் திருமணம்
முடிந்ததும் பந்திக்கும்
மொய்க்கும் காட்டும்
அவசரத்தை பால் ராபர்ட்
வீட்டுக் கல்யாணத்தில்
காட்டவில்லை...

மணமக்களை
வாழ்த்த வந்த கூட்டத்தில்
நண்பர்களோடு வரிசையில்
நின்றபோது தோன்றியது
வரிசை மெதுவாகவே
நகரட்டும் என்று...

நான் பார்த்து ரசித்த
பிரம்மாண்டமான
திருமணவிழாக்களில்
இதுவும் ஒன்று
அது மிகவும் நன்று...

புதுமணத் தம்பதியர்
கீர்த்தனா பால்
ஆல்ஃப்ரட் சாமுவேல்
செல்வங்கள் பதினாறும் பெற்று
பல்லாண்டு பார் போற்ற
வாழ்க! வாழ்க!!
😀👍🙏

குறிப்பு: ஜிஸிஇ'86 - Government College of Engineering, Tirunelveli (1982-86 Batch).

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Jan-17, 10:58 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 92

மேலே