காதல் செய்வாயா அன்பே

நான் உன் பெயரை உச்சரிக்கையில்
ஒளிந்திருந்த சூரியன் கூட
விழித்தெழுந்தான் உன் விழியைப் பார்க்க
கலைந்திருந்த மேகக் கூட்டம் கூட
கலைமகளைக் கண வருகை தந்தது
உன் காலடியில் பணிய
பகல்நிலவும் உன் பார்வை பட்டதும் பயந்தோடியது
தான் அழகில்லை என்று
உன் மீது காதல் கொண்டு
நெடிக்கு நெடி
உன்னைக் கட்டி தழுவியது
நீ சுவாசிக்கும் காற்றும்
ஓளிந்திருந்த விழியோ
உறவாடிய கிளியே
ஓர் வார்த்தை செல்லடி
என்னைச் சிற்பமாய் செதுக்கிய உழியே
ஓசையின்றி உறங்குகிறேன்
உயிர் அற்ற உடலாக
உன் இதழ் அசைவில்
உயிர்த்தெழுகிறேன்
அன்பே
உயிர் உள்ள உனக்கனவனகா
காதல் செய்வாயா அன்பே