கடவுள் வகுத்த காதல் பாடம்
ஆதாம் ஏவாள் படைத்ததுடன்
ஆண்டவன் ஓய்ந்திடவில்லை.
அறிவையும் திறனையும் ஊற்றாக்கி
பகுத்து உணர்ந்து தெளிய வைத்தான்.
காதலை அறிவியலாய் பகுத்தான்.
கொதிக்கும் கோடையில் குளிர்ச்சியாய்
குளிரில் அணைத்தால் இதமாய்
காதல் பருவம் வென்றது!
காதலை சமூகவியலாய் உணர்த்தினான்.
முறைப்படி உறவு கொளச்செய்து
கூட்டு சமுதாயத்தை உணர்த்தினான்.
காதலால் மனோதத்துவ தெளிவு பெற வைத்தான்.
காதலின் இறுக்கம்
கல்யாணத்திற்குப்பின்னும்
கட்டை வேகும் வரைக்கும்
ஈர்க்க வைத்து இணைய வைத்து
பனிமலையாய் பதுக்கி வைத்தான்.
காதலோ காமமோ
நீங்கள் எல்லாம் நினைத்திருக்கும்படி
போகப்போருளோ போதைப்பொருளோ அல்ல,
பற்றுடன் ஏங்கி நீங்க படைக்கப்பட்ட பிறவிக்கடல்.
அதில் ஆழமும் அதிகம், அர்த்தமும் அதிகம்.
அழகில் ஆசையில் புரியாது தனித்து விடப்படுபவர்கள்
பிறவிப்பயன் பெறாமலே பேயாய் பிசாசாய் அலைபவர்.
நீங்கள் எப்படி? சொல்லுங்கள்!

