~ புலம்புதடி ஓர் உயிரு.. ~

விழிமோதி நானும்
மடிமீது சாய,
விழி கலங்கி என்னை
விஸ்த்தரித்துக் கொண்டவளே..!

சொல்லாமல் சென்று
கொல்லாமல் கொல்கின்றாய்
நினைவாக வந்து
பொடியாக அரிக்கின்றாய்,

நீல நிற வானுக்குள்
நீண்டதொரு பயணம்,
விழித்தபடி கண்களுக்கு
ஏது ?இங்கு சயணம்.

விலகியிருக்கையில்
வெண்ணிலவு தூரமடி,
பக்கம் நின்று பேசையிலே

பால் நிலவு சொந்தமடி,

பிரியப் பட்டு வந்தவளே..!
பிரிந்து நீ செல்வதினால்
பிளவான மனதோடு
புலம்புதடி ஓர் உயிரு..

காரணம் சொல்வாயா கண்ணிருக்கு..?
கருமணிகள் கலைந்த கண்களுக்கு........
************************

எழுதியவர் : கமல்ராஜ் (2-Jul-11, 12:51 pm)
பார்வை : 396

மேலே