மௌனம் ஓர் ஆயுதம்
இரவின்
நிசப்தத்தைப் போல
நீ
என்னிடம் மௌநித்திருக்கிறாய்!
என் இதயத்தின் விசும்பல்
உனது செவிகளில் விழுந்ததா?
உனது மௌனம்
உனக்கு கேடயமாக இருக்கின்றது!
எனக்கோ ஆயுதமாய் தெரிகின்றது!
நீ மௌனமாய் இருந்தாலும்
உனது கொலுசை பேசவைத்ததில்
என் மீதான கருணை... உனது கருணை
மிச்சமிருப்பதாய் - என்
உள்ளுணர்வு சொல்கின்றது!
உன் உணர்வு சொல்வது என்ன?
பாவம்! இவன்
பைத்தியமாய்த் திரியட்டும் என்றா?