பெண் ...


பெண்ணே! உன்னை நிலவுக்கு
ஒப்பிடமாட்டேன் அது பகலில்
மறைந்துபோவதால்
பெண்ணே! உன்னை பூவிற்கு
ஒப்பிடமாட்டேன் அது பூத்து
உதிர்வதால்
பெண்ணே! உன்னை பூமிக்கு
ஒப்பிடமாட்டேன் அது பலரது பாதங்களால்
மிதிக்கபடுவதால்
பெண்ணே! உன்னை நதிகளுக்கு
ஒப்பிடமாட்டேன் அது பல இடங்களுக்கு
ஓடிசெல்வதால்
பெண்ணே! உன்னை மின்னலுக்கு
ஒப்பிடமாட்டேன் அது சில மணித்துளி
தோன்றி மறைவதால்
பெண்ணே! உன்னை ஒப்பிடவேமாட்டேன்
ஒப்பிட உலகில் ஏதும் இல்லை என்பதால்.




எழுதியவர் : (2-Jul-11, 1:35 pm)
சேர்த்தது : siva kumar
பார்வை : 350

மேலே