நாளைய விடியல்
வெளிச்சத்தைக் கொடுத்தால் நல்லது
மனமதை விரும்பி உள்ளது
அழியட்டும் இன்றைய கவலை
மலரட்டும் ஆனந்தக் குவளை
இருட்டினில் அடங்கட்டும் துக்கம்
வெற்றியை அடையட்டும் ஏக்கம்
விடியற்காலையின் பூக்களெல்லாம்
நம் பெயர் சொல்லி மணக்கட்டும்
அதன் சுகந்தம் நம்வாழ்வில் பரவி
ஒய்யார நடைபோடட்டும் வாழ்க்கைப் புரவி

