பாசமான சின்னப் பயலுங்க‌

பேசும் பேச்சில் தேனின் சுவையே
சிரிக்கும் சிரிப்பில் இன்பமே
குடும்பம் முழுக்க சிரிக்க வைக்கும்
செயல்கள் எனக்குப் பிடிக்குமே

வால் வாலுன்னு கத்தல் எல்லாம்
என்னிடம் சுத்தமாய் இல்லீங்க‌
வீட்டை நல்லா சுத்தி வரும்
பாசமான சின்னப் பயலுங்க‌

சாதம் கொடுத்தால் கொஞ்சம் இரைப்பேன்
தண்ணீர் கொட்டி விடுவேன்
குழம்புச் சட்டியை கண்டு விட்டால்
அப்படியே கவுத்து விடுவேன்

குளிக்க என்னைக் கூட்டிப் போனால்
வீடையே குளிக்க விடுவேன்
மெல்லமாய் யாரேனும் அடித்து விட்டால்
தெருவையே எழுப்பி விடுவேன்

எந்தன் பேச்சோ யாருக்கும் புரியாது
எந்தன் பாட்டோ பிடிக்கும்
என்னை அடிப்போர் முன்னே நின்று
தூக்கச் சொல்லும் மழலையே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Oct-16, 7:27 am)
பார்வை : 66

மேலே