பனித்துளி சபதம்

புவி ஈர்ப்பு விசையே
போதும் எனை எதிர்க்காதே...!!

வீழ்வேன் என நினைக்காதே
விருந்தாவேன் கதிரவனுக்கு...!!

உன்னில் புதைய மனமில்லை
உயரச் சென்றே மரணிப்பேன்....

என்னை வெல்ல எமனில்லை...
என் வாழ்வும் சாவும் என் கையில்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (27-Oct-16, 7:20 am)
Tanglish : panithuli sabatham
பார்வை : 439

மேலே