எந்தன் தாய் ,என் தெய்வம்
தாயே நீயே
எந்தன் தெய்வம்
நானறிந்த முதல் தெய்வம்
ஏனைய தெய்வங்கள் எல்லாம்
நீயே எனக்கு காட்டிய தெய்வங்கள்
பத்து மாதம் என்னை
கருவில் வைத்து சுமந்தாய்
வயிற்றில் வளரும் எனக்கு
ஊட்டமெல்லாம் தந்து
உன்னையே தந்து வளர்த்தாய்
பதி பத்தினியே என்னை
ஈன்றெடுத்தாய்
கருவில் சிசுவாய் இருக்கையிலேயே
நான் நல்லதை கேட்க வேண்டுமென்று
நாள் தோரும் இறை நாமங்கள்
தோத்திரமாய் சொல்லிவந்தாய்
சிசுவிலிருந்தே என்னை நல்லவனாய்
வளர்த்தெடுத்தாய் , தூயவளே
நான் போற்றும் தெய்வமே
பிறந்தவுடன் என்னை என்
தந்தைக்கு முதற்கண் காட்டி
இவர் தான் உன் தந்தை ,என்று
பெருமிதத்தோடு எனக்கு
முகவரி தந்தாய்
நீ இன்றி நான் இல்லை,
அன்னையே,நீ தான்
எந்தன் தெய்வம் என்றும்
நான் வணங்கும் முதல் தெய்வம் .
தந்தையுடன் சேர்ந்து
பதி,பத்தினியாய் ,என்
அன்னையே என்னை
ஆளாக்கினாய் ,பேரறிஞனாக்கினாய்
உலகம் என்னை போற்ற
மிக்க பெருமிதம் கொண்டாய்
ஈன்ற பயன் இதுவே என்றாய்
என் உச்சி முகர்ந்தாய்
அன்னையே என் தெய்வமே
தொப்புள் கொடியில் வளர்ந்த
இந்த உறவு
நான் உள்ளவரை இருக்கும் உறவு
நீ தந்த புனித உறவு
தெய்வீக உறவு
அன்னையே நீ போற்றி
தாய்க் குலமே போற்றி
,

