மாமிக்கு ஒரு கடிதம்

தனலட்சுமி...

தாயாக நானுனை அழைத்தேன்
மாமியாகவே நின்று விட்டாய் நீயும்!
என்றேனும் உன் வார்த்தையை மறுத்ததுண்டோ?
உன்னை மீறியதும் உண்டோ
யாரால் வந்தது பிரிவு?
எதனால் வந்தது முறிவு

வழக்கை படகில் மோதி சுழன்று
கவிழ்ந்தது என் படகு!
புத்திர சோகம்
பித்தாய் பேசினாய்!
முடிந்தது உறவென்று முகம் திருப்பி கொண்டாய்!

கொள்ளியிட இருபிள்ளை உனக்கு!
கொண்டவன் இல்லையே எனக்கு!

யாருடைய இழப்பு பெரிது
யாருடைய வலி அதிகம்
யாருடைய கண்ணீர் மிகுதி இங்கு ?
போட்டியல்ல ! புரிதலே தேவை!


இன்று
தாயாக வாழ விரும்பும்
ஒரு மாமி நான் - ஆனாலும்
உலகம் சொல்லும் என்னை
தனலக்ஷ்மியின் மருமகள் என்றே!

எப்படி இருக்கிறாய் அம்மா?
எமைக்குறித்து சிறு நினைப்பேதும் உண்டோ ?
காத்திருக்கிறேன் காலத்தின் பதிலுக்காக...

அன்பு மருமகள்.

எழுதியவர் : Geetha (10-Nov-16, 3:23 pm)
சேர்த்தது : Geetha Amma
பார்வை : 541

மேலே