காதலா கற்பனையா
என்றும் போல் இன்றும் அவனுக்காக நான் காத்திருகிரேன் காலம் அத்துனையையும் மாற்றிவிடும் மனதில் உண்மையாக நினைத்தது நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, நாட்கள் கடந்தவாறே இருக்கிறது அவன் இல்லாத என் வாழ்வில், காத்திருப்பு கடுகளவும் குறையவில்லை ...
ஜன நெரிசல் கொண்ட மாநகரம் நான் மட்டும் தனிமையில், இன்று தோழியின் மூலம் தனிமையிலிருந்து மீள ஒரு வேலை.
இப்படியே கடந்தது நான்கு மாதங்கள் பகலில் பொய்சிரிப்போடு மற்றவரோடு உறையும் கேலியும் இரவோ தனிமைக்கு தீனியானது கண்ணீருக்கு சொந்தமானது ...
இன்று ஞாயிறு விடுமுறை எனக்கு மட்டும் ..... ? ஏனோ மனதில் அவனது நினைவுகள் சீறிப்பாய தொடங்கியது... யாரிவன் இதுவரை ஒருமுறை கூட நான் அவனை கண்டதில்லை அவனோடு பேசிப்பழக்கவில்லை அனால் அவனோடு பெயர் மது என்று என் மனம் கூறி அவனுக்காக ஏங்குகிறது....
காற்றில் கைவீசி நடக்கிறேன் அவனது விரல்கள் என் கைய்யொடு கை சேருவதை உணருகிறேன் மறுநொடியில் கைகள் சிறகாய் மாறி பறப்பதை ரசிக்கிறேன்... காலைவெய்யில் இதமாய் பட அவனது அணைப்பை உணருகிறேன்.... மழைத்துளி என்னை நனைக்க அவன் என்னுள் உறைவதை உணர்கிறேன்....
ஆனால் இன்னும் அவனை தேடியே என் வாழ்க்கை நகர்கிறது என்று அவனை காண்பேன் என்று அவன் மீது நான் கொண்ட காதலை சொல்ல...
இது காதலா கற்பனையா...? அறியவில்லை நான் இன்னும் .....