விதி
(செய்த ஒரு தீய செயலுக்கு எதிராக ஒன்று நடந்தே தீரும். இது பௌதிகத்தினதும், கர்மாவினதும் தத்துவம்.)
அன்று 2004 ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி. ஞாயிற்றுக்கிழமை. சிறீலங்காவில் போயா தின நாளாகும்;. கொழும்பு கோட்டை ரயில்வே ஸ்டேசனில் பல குடும்பங்கள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறையைக் களிக்க பல இடங்களுக்குப் பயணம் செய்ய மூட்டை முடிச்சுகளோடு தாங்கள் பயணிக்கவிருக்கும் சமுத்திரதேவி கடுகதி புகையிரதத்தின் வருகையை எதிர்பார்த்து, 2 ஆம் பிளட்பாரத்தில் காத்து நின்றனர். இக்கடுகதி ;புகையிரதம் கொழும்பிலிருநது தேற்கு கடற்கரையேரமாக பெலிவத்தை வரை பயணிக்கும் சமுத்திரதேவி என்ற பெயரைக் கொண்டது. சமுத்திரதேவி; கொழும்பில் இருந்து 98 மைல் தூரத்தில் உள்ள பெலியத்தைக்கு காலை 6-45 மணிக்கு புறப்படுவது வழமை. சமுத்திரதேவியில் பயணம் செய்ய அன்று எதிர்பாராத கூட்டம் காத்து நின்றது. அதில் பலர் தெற்கே பெலிவத்தைக்கு அப்பால் கிழக்கே 95 கி.மீ தூரத்தில் உள்ள கதிர்காம தெவியோ என்ற முருகனைப் தரிசிப்பதற்காக போகிறவர்கள். பெலிவதையில் இருந்து கதிர்காமத்துக்கு பஸ்சேவையுண்டு. சிலர் விடுமுறை நாட்களை குடும்பத்தோடும்,; இனத்தவர்களோடும் கொண்டாடப் போகிறவர்கள்.
ஸ்டேசன் மாஸ்டராக ரயில்வே இலாக்காவில் பல வருடங்கள் வேலை செய்யும் சேனாதீர, தெற்கே, அம்பலாங்கொடைக்கு அருகே உள்ள போகொட என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மருதானையில் உள்ள புகையிரத போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் கொண்ரோலராக வேலை செய்துவந்தார். தன் மனைவி சந்திரவதியொடும், ஒரே பதினைந்;து வயதான மகன் சுமனவீரனோடும் மருதானையில் வாடகை வீட்டில் வாழ்பவர். சந்திரவதி மருதானை பெரிய ஆஸ்பத்திரியில் நேர்சாக வேலைசெய்பவள்.
ரயில்வே இலாக்காவில் வேலை செய்வதினால் சேனாதீராவின் குடும்பத்துக்கு வருடா வருடம் இலவசமாக ரயிலில் பயணம் செய்வதற்கு வோரண்டுகள் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடைக்கும். அதை பயன் படுத்தி தன் குடும்பத்தோடு அடிக்கடி அம்பலாங்கொடையில் உள்ள தன் பெற்றோர் வீட்டிலும் , அனுராதபுரத்தில் உள்ள தன்; மனைவியின் பெற்றோர் வீட்டிலும் விடுமுறையைக் கழிக்க அவர் குடும்பம் போய்வருவது வழக்கம்.
ழூழூழூழூழூ
சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்துக கொண்டு நி;ன்ற கூட்டத்தில் சேனாதீரவின் குடும்பமும் ஒன்று. அவர் அருகே மூன்று பேரைக் கொண்ட இன்அனாரு குடும்பமும், சூட்கேசுகளோடு சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்து நின்றது. அக்குடும்பத்தின் தலைவர் சுமார் அறுபது வயது மதிக்கக் கூடிய முதியவர்.
“ இண்டைக்கு டிரேயின் லேட் போல் இருக்கு” முதியவர் பேச்சை சிங்களத்தில் ஆரம்பித்தார்.
.
“ வழக்கத்தில் 6.30 க்கு, நேரத்துக்கு வந்துவிடும்.” சேனாதீர பதில் சொன்னார்.
“ அதெப்படி சொல்லுகிறீர்’?
“ நான் ரயில்வே இலாக்காவில், ஸ்N;டசன்மாஸ்டராக வேலை செய்பவன். இப்போ மருதானை கொண்டிரோல் ரூமில் வேலை செய்கிறன். அதனாலை தான் சொல்லுகிறன்”இ சேனாதீரா முதியவர் கேட்ட கேள்வி பதில் சொன்னார்.
“ அப்போ நீங்கள்…” முதியவர் கேட்டார்
“ என்றை பெயர் சேனாதீர. இவர்கள் இருவரும் என் மனைவி சந்திரவதியும் மகன் ஜெயவீராவும்;. நீங்களும் உங்கள் குடும்பமும்; வெகு தூரத்துக்கே பயணம்” ? சேனாதீர முதியவரைப் பார்த்துக் கேட்டார்.
முதியவர் தன்னை பந்துசேனா என்று அறிமுகப்படுத்திய பின்னர்; தன் மனைவி சீலாவதியையும், பதினாறு வயதுடைய மகன் கருணாத்திலக்காவையும் அறிமுகப்படுத்தினார்;,
“ நாங்கள் கதிர்காமத்துக்குப் போகிறோம்” என்றார் பந்துசேனா.
“ உங்;களைப் பார்த்தால் ரிட்டயரான கவர்மண்ட சேர்வண்ட் போலத் தெரிகிறது”இ சேனாதீர பந்துசேனாவைப் பார்த்துக் கேட்டார்.
“ அதெப்படி உங்களுக்குத் தெரியும சேனா?”.
“ உமது கையில் உள்ள அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கறுப்பு நிற தோல் பாக் சொல்லுகிறதே . நானும் உதைப் போல் ஒரு பாக் வைத்திருக்கிறன்.”
“ எனது டிப்பாரட்மெண்டாhல் எனக்குத் தந்த இந்த லெதர் பாகனை; சுமார் இருபத்தைந்து வருடங்களாக எனக்கு சேவை செயதிருக்கிறது. வத்திருக்கிறன். நான் தபால் இலாக்காவில் கிளார்க்காக சேர்ந்து இருண்டு வருஷத்தில் கிடைத்த உறுதியான பாக். நான் முப்பது வருஷம் வேலை செய்து, பரிபாலன அதிகாரியாக ரிட்டையராகி ஒரு வருஷமாகிறது.”
“ நீங்கள் இருப்பது கொழும்பா”?
“ கொழும்பு 5 நாரஹன்பிட்டியாவில் உள்ள அன்டேர்சன் பிளட்டில் இருக்கிறோம். நேர்திக் கடனை தீர்பதற்காக கதிர்காமத்துக்குப் போகிறோம்”; பந்துசேனா தங்கள் பயணத்தின நோக்கத்தைச் சொன்னார். அவர்களின் சம்பாஷணை சி;ங்களத்தில் தொடர்ந்தது.
“ கதிர்காம ஸ்கந்த தெவியோ வேண்டுவதை கொடுப்பார். ருகுணு மன்னன் துட்டகைமுனு, அவரைத் தரிசித்து எல்லாயோடு போருக்குப் போன படியால் போரில வென்றார். அதுசரி கதிர்காமத்துக்கு எதற்காக நேர்த்திக கடனா”? சேனாதீர பந்துசேனாவை கேட்டார்.
“எல்லாம் எங்கடை மூத்த மகன சந்திரசேனாவுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும்படி வேண்டுதல் வைத்து நேர்த்திக், கடனை தீர்க்கப் போகிறோம்” பதில் சொன்னாள் பந்துசேனாவின் மனைவி சீலாவதி.
“ ஏன் உங்கள் மூத்த மகனுக்கு ஏதும் சுகமில்லையா”?
“என் மகன்; வடக்கில், ஆர்மியில் லாண்ட்ஸ் கோப்பிரலாக வேலை செய்த போது ஒரு தமிழ் மாணவியை கற்பழித்து, கொலை செய்த குற்றத்துக்காக வழக்கு நடந்து, அவருக்கும் அவரோடு வேலை செய்த இரு சோல்சேர்சுககும் கொழும்பு ஹைகோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது“இ என்றார் அழாக் குறையாக முதியவர்.
“ என்ன சொல்லுகிறீர் ஐயா. உங்கடை மகன் கொலைகாரனா”?
“ நான் எப்படி சொல்லுவது. அவனை நான் கண்டிப்பாக வளர்த்தனான். எனக்கு அவன் ஆர்மியிலை சேர்ந்தது விருப்பமில்லை. தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்றும் தனது அதிகாரிகளின் கட்டளைபடி தான் நடந்ததாகவும், அந்த மாணவியின் உடலை புதைத்தாக நீதிமன்றத்தில் என் மகன் சொன்னான். ஆனால் கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுடைய வழக்கு மனித உரிமை மீறல் என்று காரணம் காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையால் பகிரங்கப் படுத்தப்ட்டுவிட்டது.
“ இப்ப எனக்கு நீர் சொல்லுகிற உம்முடைய மகனுடைய கேஸ் என் நினைவுக்கு வருகிறது. என்னோடை வேலைசெய்யும் ஸ்டேசன் மாஸ்டர் கணேஷ் என்பவரின் தூரத்துச் சொந்தக்கார குடும்பத்தில உள்ள மாணவியைத்தான் உம்முடைய மகனும் இன்னும் சில சோல்சேர்சும் சேர்ந்து கற்பழித்து, கொலை செய்து, புதைத்ததாக அவர் எனக்குச் சொன்னவர். அதோடு விசாரிக்கச் சென்ற அந்த மாணவியின் தாயையும், தம்பிiயும், சொந்தக்காரர் ஒருவரையும் கொலைசெய்து புதைத்துவிட்டதாகவும் சொன்னது என நினைவுக்கு வருகுது.. 1996 இல் நடந்த கொலைக்காக 1998 இல் உங்கள் மகனுக்கும் அவரோடு சேர்ந்த நான்கு சோல்சேர்சுக்கும் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாம். அப்படித்தானே”?இ சேனாதீர, பந்துசேனாவைக் கேட்டார்.
“ நீங்கள் சொல்வது சரி. அவனுடைய செயலால் எங்கள் குடும்பம், எங்கள் ஊரில் நாங்கள் தலை காட்ட முடியாமல் போய்விட்டது. ஊர் மக்களின் விமர்சனத்;துக்கு அளவில்லை. அவமானப்பட்டு விட்டோம் கொழும்பில் இருக்க முடியாமல்; கம்பகாவுக்கு இடம் பெயர்ந்து விட்டோம்”இ பந்துசேனா கவலையோடு சொன்னார்.
“ அப்பீல் செய்யவில்லையா”?,
“ அப்பீல்செய்தும் சரிவரவில்லை. சுப்பிரீம் கோர்ட் அப்பீலை நிராகரித்து விட்டது. இது அரசியல் கலந்த கேசாகமாறியதும் ஒரு காரணம். இந்த கொலை கெஸ் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் என்று பிரபல்யபடுத்தப் பட்டுவிட்டதே அப்பீல் நிராகரிக்கப்பட முக்கிய காரணம்”
“ இப்ப தண்டனை விதித்து 16வருடங்களாகிவிடடதே. மரணதண்டனை எப்போ நிறைவேற்றப்படும்”?;.
“ தண்டனை கொடுத்து பல வருடங்களாகிவிட்டது என்பது உண்மை. சட்டப்படி மரணதண்டைனை நீக்கப்படவில்லை. இப்போதும் மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அரசியல் கரணத்தால் தற்காலிகமாக மரணதண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கறது. எப்போது திரும்பவும் மரணதண்டiயை நிறைவேற்றத் தொடங்குவார்கள் என்பது தெரியாது. அப்போது என் மகன் உயிர் போய்விடும். நாங்கள் அப்பீல் செய்தும் சரிவரவில்லை. பல கைதிகளுக்கு மரணதண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் அரசு நிறுத்தி வைத்துள்ளது”.
“ மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் என்று கதிர்காமத்துக்கு நேர்த்தி வைத்திருக்கிறீர்களா”?.
“ ஆம். என் குடும்பமே காவடி எடுப்பதாக நேர்த்தி வைத்திருக்கிறோம். ஆயள் தண்டனையாக குறைத்தால் இன்னும் சில வருடங்களில் அவன் வெளியே வந்துவிடுவான்.”
“ நானும் உம்மைப் போல்; ஒரு பௌத்தன். எனக்கும் கதிர்காம ஸ்கந்த தெய்யோ மேல் முழு நம்பிக்கை உண்டு. வருடா வருடம் கோயிலுக்கு குடும்பத்தோடு போய் வருவேன்” என்று சொல்லி முடிக்கும் தருவாயில் சமுத்திரதேவி இரைச்சலோடு மேடைக்கு வந்தது.
பயணிகள் பிரயாணம் செய்யும் கொம்பார்ட்மென்ட் எனப்படும் எட்டு பெட்டிகளைப் பூட்டிய எண் 591 சமுத்திரதேவி கடுகதி புகையிரதம் சுமார் 1700 பயணிகளை சுமந்து கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற உறுமும் சத்தத்தோடு ஸ்டேசனில் காலை 7.00 மணிக்கு பிளட்போர்மில் வந்து நின்றது. பிளாட்போர்மில் நின்ற பயணிகள் முண்டி அடித்துக்கோண்டு பயணிகள் பெட்டிகளில் ஏறினார்கள்.
இரு குடும்பங்களுக்கும் ஒரே கொம்பார்ட்மென்டில். அருகருகே அவர்களுக்கு சீட்கிடைத்த்து, அவர்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்;. ஆதனால் அவர்களிடையே சம்பாஷணை தொடர்ந்தது.
“ அதுசரி நீங்கள் எங்கே பயணம்”? பந்துசேனா சேனாதீராவைக் கேட்டார்.
;
“ நாங்கள் அம்பாலாங்கொடையில உள்ள எங்கடை கிராமத்துக்குப் போறோம். எனது தந்தைக்கு அவ்வளவுக்கு உடம்பு சரியில்லை. சில பிக்குகளுக்கு தானம் கொடுத்து, மந்திரித்து, பிரித் ஓதி, அவர்கையில் நூல் கட்ட என் அக்கா ஒழுங்கு செய்திருக்கிறா. அதில் பங்கு கொள்ள குடும்பத்தோடு போகிறோம்”.
“ கொழும்பில் இருந்து வெகுதூரமே அம்பலாங்கொடை’?
“ கொழும்பில் இருந்து தெற்கே சுமார் 85 கி.மீ தூரம். இரண்டு மணித்தியாலத்தில் போய் விடுவோம். காலியில் இருந்து அம்பாலாங்கொடை 30 கி.மீ தூரம். எங்கடை ஊரிலை தான் ஆர்மியிலை பீல்ட் மார்ஷலாக இருந்த சரத் பொன்சேக்கா பிறந்தவர். அவர் எனக்குச் தூரத்துச் சொந்தம் கூட.”
“ நீஙகள் பொளத்தன் என்று சொன்னீரே அனால் உமது உறவினர் பெயர் பொன்சேக்கா என்ற கத்தோலிக்க பெயராக இருக்கிறதே”.
“ அதெல்லாம் போரத்துக்கோயர் ஆட்சியின போது எற்பட்ட மதமாற்றமும் பெயர்; மாற்றமும். இன்னும் அந்த போர்த்துக்கேய பெயர்கள் மறையவில்லை”
சமுத்திரதேவி தெஹிவளை ஸ்டேசனை தாண்டும் போது மகன் பசிக்கிறது அம்மா என்று கேட்ட படியால் பந்துசேனாவின் மனைவி சீலாவதி, கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்தாள்.
இடியப்பமும், சீனிசசம்பலும,; சொதியும் கொண்டு வந்திருக்கிறோம். எங்களோடு பகிர்ந்து சாப்பிடுகிறீர்களா”? பந்துசேனாவின் மனைவி கேட்டாள்.
“ வேண்டாம். கேட்டதுக்கு நன்றி.; காலை சாப்பாடு முடித்துவிட்டு தான் புறப்பட்டு வந்தோம் இன்னும் இரு மணி நேரத்தில் அம்பலாங்கொடைக்கு போய் விடுவோம். அது சரி உங்கள் மகன் எங்கை, படிக்கிறார்.”?
“ மகன் ஆனந்தா கொலேஜில் ஏ லெவல் படிக்கிறான்”
.
“ என்னவாக உங்கடை மகனுக்கு வர விருப்பம்”?, சேனாதீராவின் மனைவி கேட்டாள்.
“ எண்டை மகனுக்கு டாக்டராக வர விருப்பம். என்ன வந்தாலும்; தான் ஆர்மியிலை; சேர மாட்டேன் என்கிறான். அவனுக்குத் தன் தமையனுக்கு நடந்தது தெரியும். அவன் படிக்கும் கல்லூரியில் அவனை, ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் கேசை பற்றி பல கேள்விகள் கேட்கிறார்கள்”.
“ என்ன செய்வது? குடும்பத்தில் ஒருவருக்கு மரணதண்டனை கிடைத்தால் அதைபற்றி சமூகம் துருவித் துருவி கேள்விகள் கேட்பது சகஜம்”
“நானும் மனைவியும் எங்கள் மகனைப் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்புவோமா என்று கூட யோசித்தனாங்கள்;. எனது மனைவியின் அண்ணன் அவுஸ்திரேலியாவில் என்ஜினியனிராக வேலை செய்கிறார். அவர்தான் எண்டை இரண்டாவது மகனை தன்னிடம் அனுப்பும்படி என் மனைவிக்குச் சொன்னாh. அவர்தான எண்டை மூத்தமகனின் கேசுக்கு செலவு செய்தவர்.”
“ அதுசரி மரணதண்டனை வி;திக்கப்பட்டு 16 வருடங்களாகிவிட்டதே. காலம் தாழ்த்துவதும் ஒரு தண்டணை போலத்தான். சாவைப் பற்றி தினமும் சிந்தித்து சிந்தித்து மனநிலை பாதிக்கப்படலாம.;”
“ உண்மைதான். அவரைப்போல் பல கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவ காத்துக்கோண்டு இருக்கிறார்கள்.”
இரு குடும்பகளுக்கிடையே சம்பாஷணை அரசியல், வேலை செய்யும் இடம், தாங்கள் வசிக்கும் ஊர், பிள்ளைகளின் படிப்பு, ஆகியவற்றை பற்றி இருந்ததினால் நேரம் போனது அவர்களுக்குத் தெரியவில்லை.
“ அடுத்த ஸ்டேசன் அம்பலாங்கொடை. இன்னும் பத்து நிடங்களில் நாங்கள் இறங்கிவிடுவோம். சந்தர்ப்பம் கிடைத்தால் எப்போதாவது ஒரு நாள் உங்கள் குடும்பத்தைச் சந்திப்போம். இதோ எனது விசிட்டிங் கார்ட் என்று பந்துசேனாவிடம் தன் கார்டை கொடுத்தார் சேனாதீர.
“ சேனா, என்னடம் விசிட்டிங் கார்ட் இல்லை. இதோ எனது விலாசம் பற்றி விபரத்தை ஒரு பேப்ரில் எழுதித் தருகிறேன்” என்றார் பந்துசேனா.
சமுத்திரதேவி அம்பலாங்கோடை ஸ்டசனை அடையும்; போது காலை 9.15 ஆகிவிட்டது.
ஐந்து நிமிடங்கள் அம்பலாங்கொடையில் நின்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு சமுத்தரதேவி காலை 9.20க்கு தன் பயணத்தைத் தொடர்ந்தது. அம்பலாங்கொடையில் இருந்து 10 கீமீ தூரத்தில் உள்ள தெல்வததை ஸ்டேசனில் சிவப்பு சிக்னல் லைட் எரிந்ததால் தொடர்நது பயணத்தை தொடரமுடியாமல் சமுத்திரதேவி நிறுத்தப்பட்டது. தெல்வத்தைவுக்கு அருகே உள்ள கிராமம் பெரலிய . புகையிரத வீதியானது கடற்கரைக்கு வெகு அன்மையில் அமைந்துள்ளது. பிரதான காலி வீதியானது கடற்கரையில் இருந்து சுமார் 200 யார் தூரத்தில் உள்ளது.
சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்கள் கடலை பாரத்தபோது என்றுமில்லாது கொந்தளித்த நிலையில் இருப்பதைக் கண்டார்கள். பந்துசேனாவோடு பயணம் செய்த ஒரு இளைஞன் கையில் இருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவில், சிங்கள வானொலி சேவையில் ஒலிபரப்பான சிங்கள பாட்டுகளை கெட்டு இரசித்து கொண்டிருந்தான். திடீரென பாட்டு நிறுத்தப்பட்டு, முக்கிய அறிவித்தல் சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பாளன் காலை 6.50 மணியளவில், இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 9.5 ரிட்சர் ஸ்கேலில் பூகம்பம்; பதிவாகி உள்ளதாகவும், புகம்பம் மையத்தில இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ள பண்டாஅசே என்ற இந்தோனேசிய மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திதயாகவும், இவ்வலைகள் இலங்கையை நோக்கி வருவதால் எந்த நேரமும் சிறீலங்காவி;ன் தெற்கும், தென் மேற்கு கரையோரப்பகுதிகளை தாக்கலாம் என்று மிண்டும் மீண்டும் செய்தியாளன் அறிவித்தான்;. அதைக் கேட்ட பந்துசெனவின் மகன்; ஜன்னலூடக கடலைப் பார்த்து, “ தாத்தே கடலைப் உடனெ பாருங்கள். கடற் தண்ணீர் படிப்படியாக வற்றி கடல் பின் வாங்குவதை அவதானியுங்கள். கடல் பறவைகள் வானத்தில் சத்தம் போட்டவாறு கூட்டமாக பறக்கின்றன. மீன்கள் கடல் தண்ணீர் வற்றியதால் துடிக்கிறது தெரிகிறது. ஏதோ நடக்கக் கூடாதது ஒன்று நடக்கப் போகுது அம்மே. ஏனக்கு பயமாக இரு;குது”இ பந்துசேனாவின் மகன் சொல்லி முடித்து சில நிமிடங்களில்; முப்பது அடி உயரமுள்ள பெரிய அலை ஒன்று பேரிரச்சலோடு நிறுத்தப்பட்டிருந்த சமுத்தரதேவி என்ஜினையும்; ரயில் பெட்டிகளையும் அதி வேகத்தோடு தாக்கியது. ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அந்த எதிர்பாராத கடல் அலையின் தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை. ஓரே கூக்குரல்களும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கேட்டது. கடல் நீர, பெட்டிகளை நிரப்பியது. சமுத்திரதேவியின் என்ஜினும,; முதல் மூன்று பெட்டிகளும் தடம்புரண்டன. அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில 40 ஆடி உயரமுள்ள இரண்டாவது முதல் அலையை விட பெரிய அலை வெகு வேகமாக சமுத்திரதேவியை தாக்கியது. மிகுதி இருந்த பெட்டிகளும் தடம்புரண்டு சில அடி தூரத்துக்கு வீசி எறியப்பட்டன. அலைகள் பிரதான வீதியைத் தாண்டி சென்று பல வீடுகளையும் தாக்கி அழித்தது. இரும்பு ரயில் பாதை நெளியும் அளவுக்கு பெரலைகளின் சக்தி இருந்து.
சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்களில் ஒரு சிலரே உயிர் தப்பினார்கள். பந்துசேனா குடும்பம் பேரலைகளில் சங்கமமாயிற்று. மூத்த மகன் செய்த குற்றத்துக்காக ஒன்றும் அறியாத பந்துசேனா குடும்பத்தை இயற்கை பழி தீர்த்துவிட்டதா.?
இந்த சம்பவம் நடந்த பெரலிய கிராம்த்தில் இருந்து வடக்கே சுமார் 15 கீமீ தூரத்தில இருந்த அம்பலாங்கொடையின் கடலோரத்தில் இருநது சில மைலகளுக்கு கிழக்கே இருந்த பொல்கொட கிராமத்தை சேனாதீர குடும்பம் போயடையும் போது பதினாரு மணியாகிவிட்டது. அவரின் உறவினர் குடும்பம் அவர்களை; வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நின்றனர்.
அவர்களைக் கண்டவுடன் சேனாதீராவின் அக்கா பெருத்த குரலில் “ ஐயோ கடவுளே உன் குடும்பம் சுனாமியின் தாக்குதலில் இருந்து தப்பித்தது. நீங்கள் செய்த புண்ண்pயம்” என்றாள்.
“ என்ன அக்கா சுனாமி என்று சொல்லுகிறிர்கள். ஒன்றும் விளங்கவில்லையே”.
“ மல்லி (தம்பி), உனக்கு செய்தி தெரியாதா? நீ வந்த சமுத்திரதேவியை சுனாமி தெல்வத்தையில் தாக்கி சுமார் 1700 பயணிகள் இறந்துவிட்டார்களாம். ஒரு சிலர் தானாம் உயிர்தப்பினார்கள்.”
“என்ன சொல்லுகிறீர்கள் அக்கா. இது உண்மையான செய்தியா’?
“ ரேடியயோவிலும,; டிவியிலும்; நியூஸ் போய் கொண்டிருக்கு. வந்து பார்” என்;றார் சேனாதீராவின் மைத்துனர்.
செய்தி கேட்ட சேனாதீர குடும்பம் அதிரச்சியில் ஒன்றுமே பேசவில்லை.
“ தாத்தே சுமத்திராவுக்கு கிட்ட கடலுக்கடியில் இன்று காலை 6.50க்கு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி அலைகள் சிறீலஙகாவை தாக்கும் என்று தெரிந்திருந்தால் ஏன் சமுத்திரதேவியை பயணம் செய்ய உங்கடைகொண்டிரோல் ரூம் அனுமதித்தது”? சேனாதீராவின் மகன் கேட்டான்.
“ மகன் நான் எதைச் சொல்ல?. கொண்டிரோல் ரூமுக்கு சமுத்திரதேவியின் பயணத்தை நிறுத்தும்படி மேலிடத்தில இருந்து உத்தரவு வந்திருக்காது என நினைக்கிறேன்.”
“அப்போ எங்களோடை நண்பர்களாக மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்த பந்துசேனா குடும்பத்துக்கு என்ன நடந்தது”? சேனாதீராவின் மனைவி சந்திரவதி கணவனைப் பார்த்து கேட்டாள்.
“ அவர்களுடைய மகன் செய்த குற்றத்துக்காக, பாவம், ஒன்றுமறியாத பந்து சேனாவின் குடும்பத்தை விதி விட்டு வைக்கவில்லை போலத் தெரிகிறது”இ என்றார் சோகத்தோடு சேனாதீர. சில மணித்தியால நட்பின் பாதிப்பு அவரில் தெரிந்தது.
********
(உண்மைச் சம்பவங்களை கருவாகக் வைத்து கற்பனையும் கலந்து எழுதப்பட்டது இக்கதை)