கிணற்றைவிட்டு வெளியே வாருங்கள்
எம்மொழியும் கற்போம்,
எம்மதமும் ஏற்போம்,
எம்முள் சாதி, மதம், நிறம், மொழி, நாடென எவ்வெறித்தனங்களும் இல்லை..
யாமறிவோம் யாவும் ஒன்றே.
வார்த்தைகளின் உச்சரிப்புகள் மாறினாலும் அர்த்தங்கள் ஒன்றுபடுகின்றன...
நான் உங்களனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில்,
கிணற்றுத் தவளையாகவே கடைசி வரை இருந்துவிடாமல்,
வெளியே வந்து உலகில் வாழ்ந்துப் பாருங்கள்..
பல நதிகளில் சென்று நீராடிப் பாருங்கள்.
கிணற்றைவிட மிக பெரியது உலகமென்பதை அறிவீர்கள்..
இவ்விடத்தே நாம் பிறந்தது வாழ்வதற்காகத் தான்.
பொறாமையோடு போட்டிகளிட்டு அழிவதற்காக அல்ல..
நம்முடைய சிறப்பை நாமே மார்தட்டியுரைத்தலென்பது வெறித்தனங்களின் உச்சக்கட்டம் தான்.
ஆனால், மனிதப்பண்பில்லா வெறியர்களிடம் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டியுள்ளது...