செல்லா நோட்டு

வாழ்க்கைக்கு தேவை பணம்
வந்தால் மாறுது மனம்
மடியில் இருந்தால் கனம்
கைக்கு காய் தாவுது தினம்
எங்கு பார்த்தாலும் கொள்ளை
ஏமாற்றும் பேர்வழிகளின் தொல்லை
பணத்திற்கு வந்தது தட்டுப்பாடு
பாரத பிரதமர் போட்ட கட்டுப்பாடு
ஐநூறு, ஆயிரம் நோட்டு செல்லாது
கள்ளத்தனமாக அச்சடிக்கக் காகிதம்
ஒரே நாளிலும் கரையாது
ஒருவருக்கும் கொடுக்க இயலாது
போட்டார் மோடி நல்ல திட்டம்
கள்ள நோட்டுகளை ஒழிக்க சட்டம்
வாங்கி வாசலிலே மக்கள் கூட்டம்
வகை தெரியாது முழித்தது பணக்காரவட்டம்
அளவுக்கு மீறிய சொத்து
அதனால் பிடித்தது சிலருக்கு பித்து
எங்கே போனது அவர்களின் கெத்து3
இனி அவரெல்லாம் வெத்து
ஐயர் தட்டில் ஐநூறு
ஆலைய உண்டியலில் ஆயிரம்
ஆஹா என்ன கொடைத் தன்மை
அத்தனையும் செல்லா நோட்டால் தான் என்பது உண்மை
குவிந்தகனை நோட்டுகள் கோடி
மனிதர்களில் எத்தனை கேடி
ஓடுகிறார்கள் சில்லரைக்கு பிச்சைக்காரர்களை தேடி
அனைத்திற்கும் மூலக்காரணம் பிரதமர் மோடி
சில நாட்களே இத்துன்பம்
சிரமம் பார்த்தல் கிடைக்குமா இன்பம்
இது நமது நன்மைக்கு என்று எண்ணுவம்
இணைந்து பிரதமருக்கு காய் கொடுப்போம்