நம் காதல் நாளில் அந்நாள் சகி

மலர்மாலை நாம்
மாற்றி உன்னருகே
அமர்ந்த அந்நொடி....
நெற்றியில் குங்குமம்
வைத்து மலர் சூட்டி ......
நம்காதலை
பகிர்ந்துக்கொண்டோம் ....
உன் இதழ்களால்
நீ கொடுத்த காதல்
முத்தங்கள் .....
உன்கை கோர்த்து
நடந்த பாதைகளில்
நம்மை வாழ்த்திய
இலைகளும் மலர்களும் .....
அந்நொடி நான்கொண்ட
ஆனந்தம் அளவிடமுடியா
பேரானந்தம் .....
இந்நொடி நம்பிரிவுக்கு
என்னிதயத்தின் வலிகளுக்கு
உன்னுடன் சுகமாய்
சென்ற பொழுதுகளே
துணையாக....
உன்வரவை எண்ணி
காத்துக்கொண்டிருக்கும்
உன்னவளின் இதயம்
உனக்காய் ......