விதைகள்
எனக்கு உயிர் உள்ளது என்று தெரியாமல்
புதைத்து விட்டார்கள் மண்ணில் என்னை...
பிறகு தான் தெரிந்தது,,,,
மண்ணை முட்டி கொண்டு முளைத்து வரும் என் திறமை...
நீயும் கலங்காதே மனமே...
உன் திறமையும் வெளி வரும் நாள் வரும்...
வலிகள் இல்லாத வாழ்க்கைகள் இங்கு உண்டோ?
எப்பொழுதும் சிரித்து கொண்டிரு....
அதற்கு வலிகள் என்றும் தடை இல்லை...
- இப்படிக்கு விதைகள்