மீடியா

“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி மரணம்”
என்ன மாமா செய்தினு தலை பிண்ணிட்டு வருவதற்குள்

" டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு"
நீங்களும் இணைந்திருக்கிறீர்களா என தெரிந்து கொள்ள தொடங்கி இந்த பட்டனை அழுத்தவும் அந்த பட்டனை அழுத்தவும் என கடவு சொல் வரை நீள்கிறது செய்தி…
//என்ன app மாமா அது..

“ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் மரணம் 16 பேர் படுகாயம்..”
" இந்தியா கிரிக்கெட் முன்னால் கேப்டன் டோனி டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றது முதல் குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று வருகிறார்..”

மார்ச் 31 தேதிக்கு மேல் பழைய 500 1000 ருபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
//அத வச்சி அதுக்கப்பறம் கப்பல் தான விட முடியும்.. அதுக்கு எதுக்கு தண்டனை..

வருமானவரி சோதனையில் என் மகன் பெயர் மட்டுமே உள்ளது என் பெயர் இல்லை - ராம் மோகன் ராவ்
// இது என்ன மாதிரியான டிசைன்

சின்னம்மாவிடம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகளின் தலைவர் தொடங்கி வரிசையாக பொது செயலாளர் பதவி ஏற்க வலியுறுத்தி கடிதம்
//செய்தி எப்போது முடியும் என்றே கணிக்க முடியவில்லை (நேற்று)

டைரக்டர் சுராஜின் கோடி ருபாய் சம்பளம் வாங்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டவேண்டும் என்ற கருத்துக்கு நடிகைகள் தமன்னா மற்றும் நயன்தாரா எதிர்ப்பு..
மிக கவர்ச்சியான அவர்களின் புகைப்படங்களோடு செய்தி...
// அப்போ டைரக்டர் சொன்னது சரினு நாசூக்கா சொல்றாங்களா

ஒரு நாளைக்கு எத்தனை எத்தனை செய்திகள்..
அடுத்தநாளே மறந்து போகவும்
கைபேசியோடு கலந்து போகவும் ஏராளமான திட்டங்கள்..

விவசாயி மரணமோ மாணவர் போராட்டமோ பின்னுக்கு தள்ளப்பட்ட துணுக்குகளாகி போகும் இம்மீடியக்களின் மத்தியில் எதிர்காலம் எவ்வாறானதாய் இருக்கும்..

//என் கோபமும் fb பதிவோடு முடிந்துபோகும் நானும் சராசரி மனுசியே

- மகாலட்சுமி

எழுதியவர் : Mahalakshmi (29-Dec-16, 3:03 pm)
சேர்த்தது : Mahalakshmi
பார்வை : 298

மேலே