என்னத்த கிழிச்சோம்
*என்னத்த கிழிச்சோம்*
***************************
அடிக்கடி போகும்
கடைகளுக்கு போனான்....
அண்ணே...
எனக்கு ஒன்னு கொடுங்க...
என்று கேட்டான்...!
தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனான்...
அங்கையும்
எனக்கு ஒன்னு தாங்கன்னு கேட்டான்...!!!
யாரோ ஒருவர்...
மெனக்கெட்டு வீட்டுக்குவந்து
ஒன்னு கொடுத்துட்டு போனார்...!!
அப்பவும் ஆசை அடங்கல...
பார்ப்பவர் கிட்டெல்லாம்...
ஒன்னு கிடைக்குமா...?
என்று கேட்டான்...!
இப்படியாக சேர்த்துவைத்த
காலெண்டரை
ஒன்றாக மாட்டிவைத்தாலும்...
வீட்டின் ஒவ்வொரு அறையிலும்
தனித்தனியே வைத்தாலும்...
அது...
காட்டப்போவது என்னவோ
தினமும்
ஒரே ஒரு தேதியைத்தான்....!!
எப்படியும் வாங்கி மாட்டுற
காலெண்டர்ல
நாலுல ஒன்ன மட்டும் தான்
தினமும் கிழிப்போம்...
மற்றவை
"இன்னைக்கு என்னத்த கிழிச்ச"
என்பதுபோல்
சும்மாத்தான் கிழிக்காமல்
தொங்கப்போகுது...
எதோ ஒரு கடவுளின் படத்தையும்...
ஒரு கடையின் விளம்பரத்தையும்...
தாங்கிக்கொண்டு....
இந்த வருடமாவது
எதற்கும் பயன்படாமல்
ஆணியில் தொங்கும் காலெண்டராக
இருக்காமல்...
தினமும் எதையாவது ஒன்றை
கிழிப்போம் என்றும்...
நமக்கு பயன்படாதது...
மற்றவருக்காகவது பயன்படுத்த தருவோம் என்றும்...
உறுதியெடுப்போம்...
*"அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்"*
🍬💐✨
இவண்
✒க.முரளி (spark MRL K)

