போதையல்ல அது புதைகுழி

வா வாவென அழைக்கும்
சொர்க்கம் அருகிலென‌
போ போவெனத் தள்ளும்
நரகம் பக்கமென‌

தலைக் குள்ளே குடிபுகும்
வாடகையாய் நோய்தரும்
சுற்றும் உல‌கை நிற்கவைக்கும்
உன்னைநன்றாய் சுற்றவைக்கும்

வாயில் மொழியில் நுழைந்துகொண்டு
வேறுபாஷை பேசவைக்கும்
கேட்போர் செவியைக் கூசவைக்கும்
நல்லோர்கூட சண்டையிடும்

சாக்கடையே நீரூற்றாகும்
ஆடை கிழிவது தெரியாது
தெருவோரமே உறவாகும்
மானம் போவதும் அறியாது

போதையேறி வாழ்வை மாற்றும்
சாலையோரம் சண்டையிடும்
கை கால் உடையும்
பேய்போல ஆட்டுவிக்கும்

வாழ்வின் நாட்கள் மெதுவாக‌
குழிக்குள்ளே இறங்கிவிடும்
சிரித்துக் கொண்டே அழுத்திவிடும்
எழமுடியாதபடி வீழ்த்திவிடும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 10:31 pm)
பார்வை : 68

மேலே