சின்ன இதழே‍ சித்திரமே

சின்ன இதழே சித்திரமே மனம்
முழுதும் நிறைந்தாய் நீ மாத்திரமே
கன்னக் குழிவிழ சிரிக்கையிலே நான்
என்னை மறந்திட்டேன் இருப்பாய் பத்திரமே

வீரம் கற்றே வளர்ந்திடுவாய் நீ
விவேகம் அதிகம் கொண்டிடுவாய் பலர்
உன்னைப் பார்த்து நகைக்கும் முன்னே
நீ தென்னை மரமென உயர்ந்திடுவாய்

சாதிக்கத் தானே பிறப்பெடுத்தாய் அதை
போதிக்க மட்டும் நானுண்டு உன்
லட்சியம் தொட்டிட வழிகளமை அதை
நிச்சயம் எட்டிட தினமுமுழை

விந்தை மனிதர் பலருண்டு அவர்
உன்னை மிதித்திட வழிபார்ப்பார் நீ
கந்தகப் பார்வை அணிந்து கொண்டு
நிந்தகம் செய்ய விலகிச் செல்வர்

சொந்தம் கூட தடைபோடும் உன்
வழியில் முட்களின் பாதைவரும் நீ
அதனைத் தாண்டி குதித்து விட்டால்
சாதனை புத்தகம் உனைத் தேடும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 10:22 pm)
பார்வை : 62

மேலே