பாதை மாறிய பயணம்

வேதம் கற்ற உலகம்
மாறிப் போனதோ
தர்மம் செய்த உலகம்
தவறு செய்யுதோ

அன்பு செய்த மனங்கள்
கோபம் கற்றதோ
ஆசை கொண்ட மனிதம்
நட்பை விற்றதோ

நேர்மை வழிப் பாதை
தனிமை யானதோ
ஊழல் மட்டும் செய்தல்
வாழ்க்கை யானதோ

சொந்தம் கொண்ட பாசம்
பிரிந்து விட்டதோ
பந்தம் என்றால் வேசம்
என்றாகிப் போனதோ

வேட்டு வைக்கும் பணமே
நாட்டை ஆளுதோ
பாட்டில் மட்டும் அன்பு
கோட்டை யுள்ளதோ

முட்கள் நிறைந்த பாதை
வாழ்க்கை இல்லையே
பாதை மாறிய பயணம்
என்றும் தொல்லையே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 10:16 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 342

மேலே